இட்டார்சி தொடருந்து சந்திப்பு நிலையம்
இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையம் (Itarsi Junction) (நிலைய குறியீடு : ET) மத்தியப் பிரதேசம் மாநிலத்தின், ஹோசங்காபாத் மாவட்டத்தின், இடார்சி நகரத்தில் அமைந்துள்ளது. ஏழு நடைமேடைகள் கொண்ட இடார்சி தொடருந்து சந்திப்பு நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 330 தொடருந்துகள் நின்று செல்கிறது. இடார்சி தொடருந்து நிலையம் இந்திய இரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மண்டலம், போபால் இரயில்வே கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. இந்தியாவின் கிழக்கிலிருந்து மேற்கேயும், வடக்கிலிருந்து தெற்கேயும் செல்லும் அனைத்து தொடருந்துகளும் இடார்சி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.
இடார்சி | |
---|---|
தொடருந்து சந்திப்பு நிலையம் | |
![]() | |
இடம் | இடார்சி, மத்தியப் பிரதேசம் இந்தியா |
அமைவு | 22°36′29″N 77°46′01″E |
உயரம் | 329.400 மீட்டர்கள் (1,080.71 ft) |
உரிமம் | இந்திய இரயில்வே |
தடங்கள் | ஹவுரா - அலகாபாத் - மும்பை தில்லி - சென்னை |
நடைமேடை | 7 |
மற்ற தகவல்கள் | |
நிலையக் குறியீடு | ET |
பயணக்கட்டண வலயம் | மேற்கு மத்திய ரயில்வே மண்டலம் |
அமைவிடம் | |
![]() ![]() இடார்சி தொடருந்து நிலையம் Location in மத்தியப் பிரதேசம் |
நின்று செல்லும் வண்டிகள்
- புதுதில்லி (31 தொடருந்துகள்)
- மும்பை (45 தொடருந்துகள் )
- கொல்கத்தா (7 தொடருந்துகள்)
- சென்னை (18 தொடருந்துகள்)
- ஹைதராபாத் (26 தொடருந்துகள்)
- பெங்களூரு (18 தொடருந்துகள்)
- புனே (16 தொடருந்துகள்)
- அகமதாபாத் (12 தொடருந்துகள்)
- திருவனந்தபுரம் (15 தொடருந்துகள்)
- பாட்னா (13 தொடருந்துகள்)
- கான்பூர் (10 தொடருந்துகள்)
- லக்னோ (32 தொடருந்துகள்)
- ஜபல்பூர் (63 தொடருந்துகள்)
- இந்தூர் (11 தொடருந்துகள்)
- போபால் (77 தொடருந்துகள்Click here for details)
- ஜெய்ப்பூர் (14 தொடருந்துகள்)
- மைசூர் (8 தொடருந்துகள்)
- புரி (2 தொடருந்துகள்)
- குவகாத்தி (3 தொடருந்துகள்)
- ராஞ்சி (2 தொடருந்துகள்)
- வாரணாசி (22 தொடருந்துகள் )
- ஜான்சி (52 தொடருந்துகள்)
- கோவா (2 தொடருந்துகள்)
முக்கிய விரைவு தொடருந்துகள்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.