தமிழ்நாடு விரைவுவண்டி
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் இந்திய ரயில்வேயினால் செயல்படுத்தப்படும் ஒரு ரயில் சேவையாகும். ஆகஸ்ட் 7, 1976 இல் இது தனது ரயில் சேவையினைத் தொடங்கியது. அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் இந்த ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. [1]முதலில் வாரத்திற்கு மூன்று முறை செயல்படும் ரயிலாகவே இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் தெற்குப் பகுதியில் முக்கியப்பகுதியான தமிழ்நாட்டினை பெயராகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட, முதல் ரயில் சேவை இதுவாகும். இது சென்னை சென்ட்ரல் மற்றும் புது டெல்லிக்கு இடையே செயல்படுகிறது. ராஜதானி எக்ஸ்பிரஸ் அல்லாமல் வேகமாக செல்லக்கூடிய ரயில் இதுவாகும். 1976 ஆம் ஆண்டில் வாரத்திற்கு மூன்று முறை செயல்படும் ரயிலாக இருந்த இந்த ரயில்சேவை, பின்னர் வாரத்திற்கு நான்கு முறை செயல்படும் ரயில் சேவையாக மாறியது. இந்த மாற்றம் 1982 ஆசிய விளையாட்டுக்கள் தொடங்குவதற்கு முன்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ஜூன் 1988 இல், மாதவ் ராவ் சிந்தியாவினால், தினசரி ரயில் சேவையாக மாற்றப்பட்டது. இதில் குவாலியர் ரயில் நிலையமும் சேர்க்கப்பட்டது. [2] 12621 மற்றும் 12622 என்ற வண்டி எண்களுடன் செயல்படும் இந்த ரயில்சேவை, இந்திய ரயில்வேயின் பிரிவுகளில் அதிவிரைவு ரயில்சேவை என்ற பிரிவின்கீழ் இயங்குகிறது.
வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்:
எண் | நிலையத்தின்
பெயர் (குறியீடு) |
வரும்
நேரம்[3] |
புறப்படும்
நேரம் |
நிற்கும்
நேரம் (நிமிடங்கள்) |
கடந்த
தொலைவு |
நாள் | பாதை |
---|---|---|---|---|---|---|---|
1 | சென்னை
சென்ட்ரல் (MAS) |
தொடக்கம் | 22:00 | 0 | 0 கி.மீ | 1 | 1 |
2 | விஜயவாடா
சந்திப்பு (BZA) |
04:10 | 04:20 | 10 நிமி | 431 கி.மீ | 2 | 1 |
3 | வாரங்கல்
(WL) |
07:03 | 07:05 | 2 நிமி | 639 கி.மீ | 2 | 1 |
4 | பால்ஹர்ஷாஹ்(BPQ) | 11:00 | 11:10 | 10 நிமி | 881 கி.மீ | 2 | 1 |
5 | நாக்பூர்
(NGP) |
14:10 | 14:20 | 10 நிமி | 1093 கி.மீ | 2 | 1 |
6 | இட்டர்சி
சந்திப்பு (ET) |
18:40 | 18:43 | 3 நிமி | 1390 கி.மீ | 2 | 1 |
7 | போபால்
சந்திப்பு (BPL) |
20:15 | 20:20 | 5 நிமி | 1481 கி.மீ | 2 | 1 |
8 | ஜான்சி
சந்திப்பு (JHS) |
00:16 | 00:28 | 12 நிமி | 1772 கி.மீ | 3 | 1 |
9 | குவாலியர்
(GWL) |
01:37 | 01:40 | 3 நிமி | 1869 கி.மீ | 3 | 1 |
10 | ஆக்ரா கண்டோமெண்ட்
(AGC) |
03:50 | 03:53 | 3 நிமி | 1988 கி.மீ | 3 | 1 |
11 | ஹசரத்
நிசாமுதீன் (NZM) |
06:40 | 06:42 | 2 நிமி | 2175 கி.மீ | 3 | 1 |
12 | புது
டெல்லி (NDLS) |
07:05 | முடிவு | 0 | 2182 கி.மீ | 3 | 1 |
வண்டி எண் 12621

இது சென்னை சென்ட்ரலில் இருந்து, புது டெல்லி வரை செயல்படுகிறது. 33 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 10 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 65 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 2182 கிலோ மீட்டர் தொலைவினை 33 மணி நேரம் மற்றும் 5 நிமிடங்களில் கடக்கிறது. இது சென்னை சென்ட்ரல் மற்றும் புது டெல்லி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 313 ரயில் நிறுத்தங்களில் 10 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. புறப்படும் நேரத்தில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் தாமதமாகவும், சென்றடையும் நேரத்தில் ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் தாமதத்தினையும் கொண்டுள்ளது. இது தனது தண்டவாளத்தினை எந்தவொரு ரயில் சேவையுடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதில் சரக்கறைக்கான வசதிகள் உள்ளன[4].
இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு. L – SLR – UR – S13 – S12 – S11 – S10 – S9 – S8 – S7 – S6 – S5 – PC – S4 – S3 – S2 – S1 – B2 – B1 – A3 –A2 – A1 – HA1 – UR – SLR
வண்டி எண் 12622
இது புது டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செயல்படுகிறது. 32 மணி நேரம் 40 நிமிடங்கள் இதன் மொத்த பயண நேரம் ஆகும். இந்த வழித்தடத்தினில் 11 நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது. மணிக்கு சராசரியாக 66 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 2182 கிலோ மீட்டர் தொலைவினை 32 மணி நேரம் 40 நிமிடங்களில் கடக்கிறது. புது டெல்லி மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட 314 ரயில் நிறுத்தங்களில் 11 நிறுத்தங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது தனது தண்டவாளத்தினை எந்தவொரு ரயில் சேவையுடனும் பகிர்ந்துகொள்ளவில்லை. இதில் சரக்கறைக்கான வசதிகள் உள்ளன[5] .
இதன் ரயில் பெட்டிகளின் அடுக்கு விவரங்கள் பின்வருமாறு. L – SLR – UR – HA1 – A1 – A2 – A3 – B1 – B2 – S1 – S2 – S3 – S4 – PC – S5 – S6 – S7 – S8 – S9 – S10 – S11 – S12 – S13 – UR – SLR
குறிப்புகள்
- "Tamilnadu Express - Everything about India!". பார்த்த நாள் 2015-08-17.
- "Classic Trains of India". Indian Railways Fan Club. பார்த்த நாள் 2015-08-17.
- "Tamil Nadu Express Train 12621 Timetable". cleartrip.com. பார்த்த நாள் 2015-08-17.
- http://indiarailinfo.com/train/tamil-nadu-sf-express-12621-mas-to-ndls/1611
- http://indiarailinfo.com/train/tamil-nadu-sf-express-12622-ndls-to-mas/1612