ஆலத்தூர் வட்டம், பாலக்காடு
ஆலத்தூர் வட்டம் (ஆங்கிலம்:Alathur Taluk) கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஆலத்தூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் முப்பது வருவாய்க் கிராமங்கள் உள்ளது[2].
மக்கள் வகைப்பாடு
இந்தியா 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 444,995 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 216,248 ஆண்கள், 228,747 பெண்கள் ஆவார்கள். ஆலத்தூர் வட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 89.95% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.14 %, பெண்களின் கல்வியறிவு 85.27 % ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலத்தூர் வட்டம் மக்கள் தொகையில் 45,660 பேர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்[4] .
மேற்கோள்கள்
- "பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களும்" (ஆங்கிலம்). கேரள அரசு. பார்த்த நாள் டிசம்பர் 21, 2014.
- "ஆலத்தூர்வட்டத்தில் உள்ள வருவாய்க் கிராமங்கள்" (மலையாளம், ஆங்கிலம்). பாலக்காடு மாவட்டம். பார்த்த நாள் டிசம்பர் 21, 2014.
- "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" (ஆங்கிலம்) (2011). பார்த்த நாள் டிசம்பர் 21, 2014.
- "ஆலத்தூர் வட்டத்தின் மக்கள் வகைப்பாடு" (ஆங்கிலம்). ourhero.in. பார்த்த நாள் டிசம்பர் 21, 2014.
வெளி இணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.