ஆப்பிரிக்க-யூரேசியா

ஆப்பிரிக்க-யூரேசியா (Afro-Eurasia[1], Afrasia அல்லது Eurafrasia) என்பது யூரேசியா, ஆப்பிரிக்கா ஆகிய இரு கண்டங்கள் இணைந்த ஒரு கண்டத்தைக் குறிக்கும் சொல்லாகும். இணைந்த இக்கண்டத்தின் மொத்த நிலப்பகுதியும் 5.7 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. இது உலகின் மொத்த மக்காள்தொகையில் 85 விழுக்காடு ஆகும்[2].

ஆப்பிரிக்க-யூரேசியாவும் அதைச் சூழ்ந்த தீவுகளும்

பொதுவாக, ஆப்பிரிக்க யூரேசியா என்ற இக்கண்டம் ஆப்பிரிக்காவையும் யூரேசியாவையும் சூயஸ் கால்வாய் வழியே பிரிக்கிறது. யூரேசியா என்பது மேலும் ஐரோப்பா, மற்றும் ஆசியா எனப் பிரிக்கப்பட்டுள்ளது. வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக ஆப்பிரிக்க-யூரேசியா என்பது யூரேசியா-வடக்கு ஆப்பிரிக்கா, மற்றும் சகாரா ஆப்பிரிக்கா என்றவாறும் பிரிக்கப்படுகிறது[3].

பழைய உலகம் (Old World) என்பது ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் இவற்றின் நிலப்பகுதிகளை சாராத அவற்றைச் சூழவுள்ள தீவுகளை உள்ளடக்கியதாகும்.

நிலவியல் ரீதியாக, ஆப்பிரிக்கா ஐரோப்பாவுடம் மோதுகைக்குள்ளாகும் போது ஆப்பிரிக்க-யூரேசியா ஒரு பெருங்கண்டமாக (supercontinent) உருவாகும். இந்நிகழ்வு ஸ்பெயினின் தென்முனை ஆப்பிரிக்காவை அடையும் போது, அதாவது இன்னும் 600,000 ஆண்டுகளில் நிகழக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இடம்பெறும் போது, மத்தியதரைக் கடல் அத்திலாந்திக் பெருங்கடலில் இருந்து பிரிந்து விடும். இன்னும் 50 மில்லியன் ஆண்டுகளில் ஆப்பிரிக்கா முற்றாக ஐரோப்பாவுடன் மோதி, மத்தியதரையை முற்றாக மூடி புதிய மலைத்தொடர்களை உருவாக்கும்[4].

மேற்கோள்கள்

  1. Andre Gunder Frank (1998), ReORIENT: Global Economy in the Asian Age, University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0520214743
  2. இது ஐநாவின் 2007 ஆம் ஆண்டிற்கான கணிப்பீடாகும், World Population Prospects: The 2006 Revision (Highlights).
  3. Jared Diamond (1997), Guns, Germs, and Steel: The Fates of Human Societies, Norton & Company, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-393-03891-2
  4. Africa will collide Europe and Asia, 50 Million years from now
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.