ஆப்கானித்தான் அமீரகம்

ஆப்கானித்தான் அமீரகம் (Emirate of Afghanistan, பஷ்தூ: د افغانستان امارت ) நடு ஆசியாவிற்கும் தெற்கு ஆசியாவிற்கும் இடையிலிருந்த அமீரகம் ஆகும்; இது தற்போது இசுலாமிய ஆப்கானித்தானியக் குடியரசாக இருக்கின்றது. துராணிப் பேரரசிலிருந்து இது பிரிந்து தோஸ்த் மொகமது கானால் உருவாக்கப்பட்டது; அவர் காபூலில் பராக்சாய் அரசமரபை நிறுவினார். இந்த அமீரகத்தின் வரலாற்றில், நடு ஆசியாவில் முதன்மை வகிக்க உருசியப் பேரரசுக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே நடந்த ' நிழல் போட்டி' பெருமளவில் இடம் பிடித்திருந்தது. இக்காலத்தில் ஆப்கானித்தானத்தில் ஐரோப்பியர் தாக்கம் மிகுந்திருந்தது; தெற்கு ஆசியாவில் ஐரோப்பியரின் குடியேற்ற விரிவாக்கம் நிகழ்ந்தது. ஆப்கானித்தான் அமீரகம் சீக்கியப் பேரரசுடனான போரைத் தொடர்ந்தது; இதனால் பிரித்தானியர்-தலைமையிலான இந்தியப் படைகள் ஆப்கானித்தானைக் கைப்பற்றி 1842இல் ஆப்கானித்தானை முற்றிலும் அழித்தன. இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் போரின்போது, பிரித்தானியர்கள் மீண்டும் ஆப்கானித்தானை முறியடித்தனர்; இச்சமயம் பிரித்தானியர் ஆப்கானித்தானின் வெளிநாட்டு விவகாரங்களை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்தனர். மூன்றாம் ஆங்கில-ஆப்கானித்தானியப் போரில் வென்ற அமனுல்லாகான் 1919இல் கண்ட உடன்படிக்கையின்படி முழுமையான அதிகாரத்தை மீட்டுக் கொண்டது.[1]

ஆப்கானித்தான் அமீரகம்
د افغانستان امارت
ட ஆஃப்கானிஸ்தான் அமாரத்
பிரித்தானிய கையாளுகை (1839-1842)
பிரித்தானியர் பாதுகாப்பில் (1879–1919)

1823–1926
 

கொடி சின்னம்
ஆப்கானித்தான் அமைவிடம்
1893 துராண்டு கோடு உடன்பாட்டிற்கு முந்தைய ஆப்கானித்தான்
தலைநகரம் காபூல்
மொழி(கள்) பஷ்தூ, பாரசீகம்
சமயம் சுன்னி இசுலாம்
அரசாங்கம் இசுலாமிய சமயச்சார்பான முழுமையான முடியாட்சி
அமீர்
 -  1823–1829 (முதல்) தோஸ்த் மொகமது கான்
 - 1919–1926 (கடைசி) அமனுல்லாகான்
சட்டசபை லோயா ஜிர்கா
வரலாற்றுக் காலம் 19வது நூற்றாண்டு
 - உருவாக்கம் 1823
 - குலைவு 1926
பரப்பளவு
 - 1893 6,52,225 km² (2,51,825 sq mi)
நாணயம் ஆப்கன் ரூபாய்

மேற்கோள்கள்

  1. A Selection of Historical Maps of Afghanistan
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.