ஆனந்த் பாபு

ஆனந்த் பாபு (பிறப்பு: ஆகஸ்டு 30, 1963 ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டு முதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆனந்த் பாபு
பிறப்புஆகத்து 30, 1963 (1963-08-30)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1983-1999;
2009- தற்போது வரை
பெற்றோர்நாகேஷ்
ரெஜினா
வாழ்க்கைத்
துணை
சாந்தி (1985-2013)
(மணமுறிவு) [1]
பிள்ளைகள்ஜோஸ்யா (b.1987)
கஜேஸ் (b.1991)
ஜான் (b. 1997)
ரெஜினா மேரி (b. 2003)

வாழ்க்கைக் குறிப்பு

ஆனந்த் பாபு 1985 திசம்பர் 8 அன்று சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இளைய மகனான கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளானதால் 2006 ஆவது ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[2]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்மொழிகதாபாத்திரம்குறிப்புகள்
1983தங்கைக்கோர் கீதம்தமிழ்
1984கடமைதமிழ்
1984புயல் கடந்த பூமிதமிழ்
1984நியாயம் கேட்கிறேன்தமிழ்
1985பாடும் வானம்பாடிதமிழ்பாபு
1985வெற்றிக்கனிதமிழ்
1985உதய கீதம்தமிழ்ஆனந்த்
1985பார்த்த ஞாபகம் இல்லையோ தமிழ்
1985விஸ்வநாதன் வேலை வேண்டும் தமிழ்
1985இளமை தமிழ்
1985பந்தம் தமிழ்
1985அர்த்தமுள்ள ஆசைகள் தமிழ்
1986மௌனம் கலைகிறதுதமிழ்
1986பலேமித்ருடுதெலுங்கு
1988கடற்கரை தாகம்தமிழ்
1989தாயா தாரமாதமிழ்
1990புரியாத புதிர்தமிழ்பாபு
1990புது வசந்தம்தமிழ்மைக்கேல்
1990எங்கள் சுவாமி அய்யப்பன்தமிழ்சிறப்புத் தோற்றம்
1990எதிர் காற்றுதமிழ்ஜனா (ஜனார்த்தன்)
1990புதுப்புது ராகங்கள்தமிழ்
1991சிகரம்தமிழ்கிருஷ்ணா
1991சேரன் பாண்டியன்தமிழ்சந்திரன்
1991இதய ஊஞ்சல்தமிழ்
1991எம்ஜிஆர் நகரில்தமிழ்
1991புத்தம் புது பயணம்தமிழ்பாபு
1991அன்பு சங்கிலிதமிழ்
1991ஈஸ்வரிதமிழ்
1991ஒன்னும் தெரியாத பாப்பாதமிழ்
1991தாயம்மாதமிழ்
1991மாமஸ்ரீதெலுங்கு
1991இல்லு இல்லளு பிள்ளலுதெலுங்கு
1992வானமே எல்லைதமிழ்தீபக்
1992ரெண்டு பொண்டாட்டி காவல்காரன் தமிழ்கிருஷ்ணன், ஆனந்த்
1992காவலுக்கு கண்ணில்லைதமிழ்
1992செவிலியர் மிகயல்மலையாளம்பிரெத்தி
1993நான் பேச நினைப்பதெல்லாம்தமிழ்விஸ்வநாத்
1993சூரியன் சந்திரன்தமிழ்
1993என் இதய ராணிதமிழ்
1993மா வறிகி பெல்லிதெலுங்கு
1994மணிரத்னம்தமிழ்
1994பட்டுக்கோட்டை பெரியப்பாதமிழ்
1994வாட்ச்மேன் வடிவேலுதமிழ்
1994கிஷ்கிந்தா கந்தாதெலுங்கு
1995பதிலிதெலுங்கு
1996லத்தி சார்ஜ்தெலுங்கு
1996மெருப்புதெலுங்கு
1996வீட்டுக்குள்ளே
1997ரோஜா மலரேதமிழ்அன்பு
1998சந்தோசம்தமிழ்கார்த்திக்
1998சேரன் சோழன் பாண்டியன்தமிழ்சோழன்
1999அன்புள்ள காதலுக்குதமிழ்
2009ஆதவன்தமிழ்தரணி
2009மதுரை சம்பவம்தமிழ்
2009ஒளியும் ஒலியும்தமிழ்
2012ஏதோ செய்தாய் என்னைதமிழ்வீரு
20141 நினொக்கதினேதெலுங்குசந்திரசேகர்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.