18
கிபி ஆண்டு 18 (XVIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "திபேரியசு மற்றும் செர்மானிக்கசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Tiberius and Germanicus) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் "ஆண்டு 771" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 18 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினெட்டாம் ஆண்டாகும்.
நூற்றாண்டுகள்: | கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள் |
ஆண்டுகள்: | 15 16 17 - 18 - 19 20 21 |
18 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 18 XVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 49 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 771 |
அர்மீனிய நாட்காட்டி | N/A |
சீன நாட்காட்டி | 2714-2715 |
எபிரேய நாட்காட்டி | 3777-3778 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
73-74 -60--59 3119-3120 |
இரானிய நாட்காட்டி | -604--603 |
இசுலாமிய நாட்காட்டி | 623 BH – 622 BH |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 268 |
யூலியன் நாட்காட்டி | 18 XVIII |
கொரியன் நாட்காட்டி | 2351 |
நிகழ்வுகள்
இடம் வாரியாக
ரோமப் பேரரசு
- செருமன் குடித் தலைவன் அர்மீனியசு மார்க்கோமன்னி இராச்சியத்தை அழித்தான்.
சிரியா
- உரோமைப் பேரரசின் புதிய தளபதியாக செருமானிக்கசு சீசர் சிரியா சென்றடைந்தான்.
பார்த்தியா
- செருமானிக்கசு பார்த்தியாவின் இரண்டாம் அர்த்தபானுசுவுடன் அமைதி உடன்பாட்டிற்கு வந்தான். இதன் படி அவன் ரோமின் நண்பனாகவும், அரசனாகவும் அங்கீகரிக்கப்பட்டான்.
சீனா
- மஞ்சள் ஆறு பெருக்கெடுத்ததை அடுத்து விவசாயிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களை அடக்க வாங் மாங் அரசன் ஒரு இலட்சம் பேரடங்கிய இராணுவத்தினரை அங்கு அனுப்பினான்.
இந்தியா
- இந்தியாவில், இந்தோ-பார்த்தியர்கள் தக்சசீலாவைத் தமது ஆட்சிக்குள் கொண்டு வந்தனர்.
பிறப்புகள்
இறப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.