0கள்

0கள் (0s) என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் முதலாம் பத்தாண்டைக் குறிக்கும். எனினும் இப்பத்தாண்டு காலத்தின் ஆண்டுகள் எப்போதும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. ஜூலியன் நாட்காட்டியிலோ கிரெகோரியன் நாட்காட்டியிலோ சுழியம் ஆண்டு (0) கிடையாது. எனவே கிபி 1 இற்கு முன்னர் கிமு 1 ஆண்டு இருந்தது.

ஆயிரவாண்டுகள்: 1-ஆம் ஆயிரவாண்டு
நூற்றாண்டுகள்: 1-ஆம் நூற்றாண்டு கிமு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள் கிமு10கள் கிமு 0கள் - 0கள் - 10கள் 20கள் 30கள்
ஆண்டுகள்: 1 2 3 4
5 6 7 8 9
கிபி 1ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிழக்கு அரைக்கோளம்

இக்கட்டுரை கிபி 1–9 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் முதல் 9 ஆண்டுகளைப் பற்றியது.

0களில் நடந்த நிகழ்வுகள் ஆண்டுவாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

==


1

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • அகஸ்டசின் பணிப்பின் பேரில் டிபேரியசு செருமானியாவில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்கினான் (1–5).
  • கையசு சீசர், லூசியசு பவுலசு ஆகியோர் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
  • உரோமில் பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது[1].

ஆசியா

ஆப்பிரிக்கா

அமெரிக்கா

சமயம்

  • இயேசு பிறப்பு (அனோ டொமினி முறையை அறிமுகப்படுத்திய டயோனீசியசு எக்சிகூஸ் என்பவரின் படி[2][3].) ஆனாலும், டயோனீசியசு கணக்கிட்ட முறையில் தவறு ஏற்பட்டதால், இயேசுவின் பிறப்பை கிமு 1 ஆகக் குறித்தார் எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[2][3].
  • சீனாவில் பௌத்தம் அறிமுகமானது.

2

இடம் வாரியாக

ஆசியா

  • சீனாவில் சென்றா ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 60 மில்லியன் (59,594,978 மக்கள்)[4]
  • சீன மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வியட்நாமில் ஒரு மில்லியன் மக்கள் வாந்தனர்.

3

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • ஆகுஸ்டசின் ஆட்சி 10 ஆண்டு காலத்துக்கு நீடிக்கப்பட்டது.
  • ஆகுஸ்டஸ் தனது பேரன் கையசு சீசரை தனது நேரடி வாரிசாக்கும் நோக்கில் தத்தெடுத்தான். கையசு கிழக்கு நாடுகளுக்கு சிறப்புத் தூதரராக அனுப்பப்பட்டான்.
  • லூசியசு லாமியா, மார்க்கஸ் மெசாலினசு ஆகியோர் ரோமப்பேரரசின் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

ஐரோப்பா

  • மார்க்கொமானி அரசன் மார்பொட் என்பவனின் கீழ் ஐந்து செருமனிய இனங்கள் ஒன்றுபட்டன. இவ்விணைப்பு ரோமப் பேரரசுக்கு ஒரு அச்சுறுத்தலாக அமைந்தது. இவ்வினங்கள் பின்னர் சிலேசியா, சாக்சொனி ஆக உருவெடுத்தன.

4

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • பேரரசன் ஆகுஸ்டசு டிபேரியசு என்பவனை ரோமுக்கு அழைத்து தனது வாரிசாகவும், தனக்கு அடுத்த பேரரசன் ஆகவும் அறிவித்தான். அதே நேரம், அகிரிபா பஸ்துமசு என்பவனையும் தனது வாரிசாக அறிவித்தான்.
  • டிபேரியசு தனது வார்சாக செருமானிக்கசு என்பவனைத் தனது வாரிசாக அறிவித்தான்.
  • ரோமப் பேரரசுக்கும் செருமனிய பழங்குடி செருஸ்க்கி என்பவர்களுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.

மத்திய கிழக்கு

பார்த்தியா நிலப்பகுதியின் (இன்றைய ஈரானில்) அரசன் பிராத்தசிசு மற்றும் அரசி மூசா ஆகியோர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

அறிவியல்

  • டமாஸ்கசின் நிக்கலாசு 15 பாகம் கொண்ட உலக வரலாற்றை எழுதினார்.

5

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

கல்வெட்டுகள்

  • திருநாதர் குன்றுக் கல்வெட்டு - தமிழ் எழுத்துக்களால் ஆன கல்வெட்டு

6

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • படைகளில் போர் புரிந்து இளைப்பாறியவர்களுக்காக நிதியம் ஒன்றை ரோமப் பேரரசன் அகஸ்ட்டஸ் நிறுவினான்.
  • ரோமில் இடம்பெற்ற உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக அகஸ்ட்டசு மன்னன் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சோளத்தின் அளவை இரண்டு மடங்காக்கினான்.
  • அகஸ்ட்டசு தனது வளர்ப்பு மகனான அக்ரிப்பா பொஸ்டுமசு என்பவனை பிளனேசியா தீவுக்கு நாடு கடத்தினான்.
  • மார்க்கசு எமிலியசு லெப்பிடசு, லூசியசு அருண்டியசு ஆகியோர் ரோமப் பேரரசின் ஆட்சியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

சீனா

  • பெப்ரவரி 3 - சீன மன்னன் பிங் டை தனது 14வது அகவையில் இறந்தான். 2 வயதான ரூசி யிங் சீன அரசனாக அறிவிக்கப்பட்டான்.

7

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • இல்லிரியான்ஸ் ரோம ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
  • பன்னோனியான்ஸ் டால்மேடியன் மற்றும் இல்லிரியான்ஸ் ஆகியோருக்கு எதிராக கிளர்ச்சி செய்கின்றனர்.
  • கான்கார்டின் கோவில் கட்ட தொடங்கப்பட்டது.

ஆசியா

  • வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.

8

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • ஆகஸ்ட் 3 – ரோம தளபதி திபெரியாஸ் டால்மேதியான்களை பதினஸ் ஆற்றில் தோற்கடித்தார்.

ஆசியா

  • வோநோனஸ் I பார்தியாவின் மன்னனாகிறான்.

9

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

  • டியூட்டோபர்க் காட்டுப்பகுதியில் வாருசின் தலைமையிலான ரோம இராணுவம் தோற்றதை அடுத்து, இலத்தீன் மற்றும் செருமனிய மொழி பேசும் இனத்தவர்களைப் பிரிக்கும் எல்லையாக ரைன் ஆறு நிறுவப்பட்டது.
  • பனோனியா (இன்றைய ஹங்கேரி) ரோம ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது.
  • மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, திருமணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரோமில் சட்டம் இயற்றப்பட்டது. இதன் படி, குழந்தைகளற்ற உறவுமுறை தடை செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

  1. The Silkroad Foundation's silk road chronology
  2. Georges Declercq, Anno Domini: The origins of the Christian Era (Turnhout, Belgium: Brepols, 2000), pp.143–147.
  3. G. Declercq, "Dionysius Exiguus and the introduction of the Christian Era", Sacris Erudiri 41 (2002) 165–246, pp.242–246. Annotated version of a portion of Anno Domini.
  4. Klingaman, William K., The First Century: Emperors, Gods and Everyman, 1990, p 56

குறிப்பிடத்தக்கவர்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.