1680கள்
1680கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1680ஆம் ஆண்டு துவங்கி 1689-இல் முடிவடைந்தது.
ஆயிரவாண்டுகள்: | 2-ஆம் ஆயிரவாண்டு |
நூற்றாண்டுகள்: | 16-ஆம் நூற்றாண்டு - 17-ஆம் நூற்றாண்டு - 18-ஆம் நூற்றாண்டு |
பத்தாண்டுகள்: | 1650கள் 1660கள் 1670கள் - 1680கள் - 1690கள் 1700கள் 1710கள் |
ஆண்டுகள்: | 1680 1681 1682 1683 1684 1685 1686 1687 1688 1689 |
நிகழ்வுகள்
- யாழ்ப்பாணத்தில் இந்து மதச் சடங்குகள், மற்றும் வழிபாடுகளை நடத்துவோருக்கு எதிராக தண்டம் அறவிட டச்சு ஆளுநர் லோரன்ஸ் வான் பில் உத்தரவிட்டான் (1682)
- கரிபியனில் டோர்ட்டுகா தீவைச் சுற்றி இடம்பெற்று வந்த கடற்கொள்ளைகளை முடிவுக்குக் கொண்டு வர பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது (1684).
- சீன இராணுவத்தினர் அல்பாசின் என்ற இடத்தில் ரஷ்யப் படைகளைத் தாக்கினர். இந்நிகழ்வை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்ப்ந்தம் ஏற்பட்டது (1685).
- நியூட்டனின் இயக்க விதிகளை விளக்கும் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை ஐசாக் நியூட்டன் வெளியிட்டார் (1687).
உலகத் தலைவர்கள்
- டென்மார்க்கின் ஐந்தாம் கிறிஸ்டியன் மன்னன் (1670 - 1699)
- டென்மார்க்கின் நான்காம் பிரெடெரிக் மன்னன் (1699 - 1730)
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் (1660 - 1685)
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து மன்னன் இரண்டாம் ஜேம்ஸ் (1685 - 1688).
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அரசி இரண்டாம் மேரி (1689 - 1694)
- இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் (1689 - 1702)
- பிரான்ஸ் மன்னன் பதினான்காம் லூயி (1643 - 1715)
- ரோம் மன்னன் முதலாம் லெப்போல்ட் (1658 - 1705)
- ரஷ்யாவின் சார் ஐந்தாம் ஐவன் (1682 - 1696)
- ரஷ்யாவின் முதலாம் பீட்டர் (1682 - 1725)
- ஸ்பெயின் மன்னன் இரண்டாம் சார்ல்ஸ் (1665 - 1700)
- சுவீடன் மன்னன் பதினோராம் சார்ல்ஸ் (1660 - 1697)
- முகலாயப் பேரரசு மன்னன் அவுரங்கசீப் (1658 - 1707)
- முகலாயப் பேரரசன் அவுரங்கசீப்
- மரதப் பேரரசர்கள்
- Shambhaji (1680 - 1689)
- ராஜாராம் சத்திரபதி (1689 - 1700)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.