வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல்

நான்கு நற்செய்திகளும், இயேசு கிறித்து வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல் என்னும் நிகழ்வு இறுதி இராவுணவுக்கு முன்னர் நிகழ்ந்ததாக குறிக்கின்றன. இந்த நிகழ்வே இயேசுவின் பாடுகளின் துவக்கமாக கருதப்படுகின்றது.[1][2][3][4]

வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமில் நுழைதல், ஓவியர்: Pietro Lorenzetti, 1320
நற்செய்திகளின்படி
இயேசுவின் வாழ்வு

கிறித்தவம் portal

விவிலியம் portal

விவிலியத்தின்படி இயேசு இலாசரை உயிர்பெறச்செய்ததைக்கண்ட யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு யூதர்கள் பெருந்திரளாய் இயேசுவிடம் வந்தார்கள் எனக்குறிக்கின்றது. இதற்கு மறுநாள் திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று, அவரை வெற்றி ஆர்ப்பரிப்போடு எருசலேமுக்கு அழைத்துவந்தனர் எனக்குறிக்கின்றது. ஒலிவ மலையில் இருந்து இயேசு எருசலேமுக்கு வருகின்றார் என அறிந்த சிலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், 'ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! என வாழ்த்தினர்.

கிறித்தவர்கள் இந்த நிகழ்வை குருத்து ஞாயிறு என்னும் பெயரில் உயிர்ப்பு ஞாயிறுக்கு ஒருவாரம் முன்னர் நினைவுகூற்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. The people's New Testament commentary by M. Eugene Boring, Fred B. Craddock 2004 ISBN 0-664-22754-6 pages 256-258
  2. The Bible Knowledge Background Commentary: Matthew-Luke, Volume 1 by Craig A. Evans 2003 ISBN 0-7814-3868-3 page 381-395
  3. The Synoptics: Matthew, Mark, Luke by Ján Majerník, Joseph Ponessa, Laurie Watson Manhardt 2005 ISBN 1-931018-31-6 pages 133-134
  4. The Bible knowledge background commentary: John's Gospel, Hebrews-Revelation by Craig A. Evans ISBN 0-7814-4228-1 pages 114-118

மேலும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.