காலக்கடப்பு ஒளிப்படவியல்

காலக்கடப்பு ஒளிப்படவியல் (Time-lapse photography) என்பது தொடர்ச்சியாக படச் சட்டங்கள் பதியப்படும் நுட்பமாகும். இது பொதுவாக காணொளியில் உள்ள படச் சட்டங்கள் பதியப்படுவது போல் அல்லாது குறைவான அளவில் பதியப்படும். சாதாரண வேகத்தில் இயக்கும்போது, நேரம் விரைவாகச் செல்வதாய் இதில் வெளிப்படும். உதாரணமாக, காட்சியின் ஓர் படிமம் ஒவ்வொரு வினாடிக்கு ஒன்று என பதியப்பட்டு, வினாடிக்கு 30 சட்டங்கள் என்ற அளவில் இயக்கப்படலாம். இதன் விளைவாக 30 × (வினாடிக்கு 24 சினிமா / 25 பிஏல் / 30 என்டிஎஸ்சி சட்டங்கள்) கால அளவில் அதிகரித்து வெளிப்படும். காலக்கடப்பு ஒளிப்படவியலானது மீவிரைவு ஒளிப்படவியல் அல்லது மென் நகர்வுக்கு மாறானதொன்றாகக் கருதப்படுகின்றது.

2 மணித்தியாலங்கள் கொண்ட இப் பூ மலர்தல் நிகழ்வானது ஒருசில வினாடிகளுக்குச் சுருக்கப்பட்டுள்ளது.

இதன் செயல்முறை மூலம் காட்சி மனிதக் கண்களுக்கு நுண்ணியமாகப் புலப்படும். எ.கா: வானிலுள்ள சூரியன் அல்லது விண்மீன்கள் நகர்வு அல்லது பூ மலர்தல் போன்ற நிகழ்வானது மிகவும் தெளிவாக/விளக்கமாகத் தெரியும். இவ்வாறான சம்பவங்கள் சாதாரண வேகத்தில் வெளிப்படையாக அல்லது நுணுக்கமாக இருக்காது.[1]

உசாத்துணை

  1. "Time Lapse". பார்த்த நாள் 1 நவம்பர் 2014.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.