இயேசுவின் புதுமைகள்

இயேசுவின் புதுமைகள் அல்லது இயேசுவின் அரும் அடையாளங்கள் பல விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ள நிகழ்வுகளாகும். இவை நோய்களை சுகப்படுத்தல், இயற்கையின் மீதான அதிகாரம், இறந்தோரை உயிர்ப்பித்தல், பேய்களை விரட்டல், வலு குறைந்தவர்களை சீர் செய்தல் என பொதுவாக வகைப்படுத்தலாம். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் இப்புதுமைகளை உண்மை நிகழ்வுகளாக நம்பினாலும், சில புதுமைவாத கிறிஸ்தவர்கள் இவை படிப்பினைக்காக கூறப்பட்ட கதைகள் என்கின்றனர்.

நற்செய்திகளின்படி
இயேசுவின் வாழ்வு

கிறித்தவம் portal

விவிலியம் portal

ஒத்தமை நற்செய்தி நூல்களில் இயேசு தன் அதிகாரத்தை நிருவ மட்டும் புதுமைகள் செய்ய மறுப்பதாக விவரிக்கப்படுள்ளது.[1]யோவான் நற்செய்தி, தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாறியது முதல் இறந்த இலாசரை உயிர்ப்பித்தது வரை ஏழு புதுமைகள் குறிக்கப்பட்டுள்ளன.[2]

இசுலாமியர்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள இயேசுவின் புதுமைகளை நம்புகின்றனர்.[3]

மேற்கோள்கள்

  1. Mark 8:11-12, Matthew 16:1-4, Matthew 12:38-40, Luke 11:29-30. Cited in Funk, Robert W., Roy W. Hoover, and the Jesus Seminar. The five gospels. HarperSanFrancisco. 1993. p. 72-73.
  2. Harris, Stephen L., Understanding the Bible. Palo Alto: Mayfield. 1985. "John" p. 302-310
  3. Heribert Busse, 1998 Islam, Judaism, and Christianity, ISBN 1-55876-144-6 page 114
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.