அட்டன், இலங்கை

அட்டன் (Hatton, ஹற்றன்) இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இந்நகரைச் சூழவுள்ள தேயிலைப் பெருந்தோட்டங்களுக்கு பெயர்பெற்றதாகும். இந்நகரமானது அற்றன்-டிக்கோயா நகர சபையால் நிர்வாகிக்கப்படுகிறது. அம்பகமுவா பிரதேச செயளாலர் பிரிவில் அமைந்துள்ளது. 2001 இலங்கை அரசின் மக்கள்தொகை கணிப்பீட்டின் படி நகரின் மக்கள்தொகை 14,255 ஆகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் றொசல்லை, கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. அட்டன், கொட்டகலை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ள ”சிங்கமலைக் குகை” இலங்கையின் நீளமான தொடருந்து குகைவழியாகும்.

அட்டன்

அட்டன்
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - நுவரெலியா
அமைவிடம் 6.889°N 80.599°E / 6.889; 80.599
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1263 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 22000
 - +9451
 - CP

மக்கள் பரவல்

இனக்கள்சனத்தொகைமொத்த தொகையின் வீதம்
சிங்களவர்கள்3,75226.32
இலங்கைத் தமிழர்கள்3,27823.00
இந்தியத் தமிழர்கள்4,71333.06
இலங்கை மூர் இனத்தவர்2,30916.20
ஏனையவர்கள் (including Burgher, Malay)2031.42
மொத்தம்14,255100
Coordinates6°53′14.45″N, 80°35′55.03″Eஅட்டன்

Source:

முக்கியமான பாடசாலைகள்

  • ஹைலன்ஸ் பாடசாலை

1892 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலையே அட்டன் நகரிலுள்ள பாடசாலைகளில் பெரியதாகும். இது முக்கியமாக தமிழர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும்.

  • சிறீபாத பாடசாலை

இது முக்கியமாக சிங்கள மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையாகும்.

  • St. Gabriel's Convent

இது பெண்களுக்கான பாடசாலையாகும்.

  • St. John Bosco's College

இது ஆண்களுக்கான பாடசாலையாகும்.


இலங்கை மத்திய மாகாணத்தில் உள்ள நகரங்கள்
மாநகரசபைகள்கண்டி | மாத்தளை | நுவரெலியா
நகரசபைகள்நாவலப்பிட்டி | கம்பளை | கடுகண்ணாவை | வத்தேகாமம் | அட்டன் - டிக்கோயா | தலவாக்கலை - லிந்துலை | உடதலவின்ன
சிறு நகரங்கள்அக்குரணை | கினிகத்தனை | குண்டசாலை | கொட்டகலை | தெல்தோட்டை | தொழுவை | பன்விலை | பேராதனை | மினிப்பே | வட்டவளை | இரம்படை | புசல்லாவை | உலப்பனை | பொகவந்தலாவை


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.