உடத்தலவின்னை
உடத்தலவின்னை (Uda Talawinna) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். உடத்தலவின்ன கண்டி மாவட்டத் தலைநகரான கண்டி நகரில் இருந்து 8.6 கி.மீ. வடக்கே அமைந்துள்ளது. அரசியல் உள்ளூராட்சி பாததும்பறை பிரதேச சபையாலும் மேற்கொள்ளப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசசபை என்பன கூட்டாக பாததும்பறை பிரதேச செயளாலார் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது கண்டி நகரத்தில் இருந்து வடக்குத் திசையில் அமைந்துள்ளது.
உடத்தலவின்னை | |
![]() ![]() உடத்தலவின்னை
| |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
அமைவிடம் | 7.367°N 80.6167°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 485.7632 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
மக்கள் தொகை (2001) |
55366 |


கல்வி
பாடசாலைகள்
வேறு கல்வி நிறுவனங்கள்
- ஹகீமிய்யா அரபுக் கலாசாலை. இங்கு நாட்டின் பல இடங்களில் இருந்து மாணவர்கள் வந்து ஷரிஆ கல்வியை கற்கின்றனர்.
புவியியலும் காலநிலையும்
உடத்தலவின்னை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 485 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது.
இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 24 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
மக்கள்
இது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயலாளர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவராவர்.
இங்கு பிறந்த குறிப்பிடத்தக்கவர்கள்
- யு. எல். எம். நௌபர், உளவளத்துறை நிபுணர்
- ஏ. ஆர். ஏ. ஃபரீல், ஊடகவியலாளர்
- ஏ. எம். வைஸ், எழுத்தாளர்
- பீ. எம். புன்னியாமீன் சுதந்திர ஊடகவியலாளர், பதிப்பாசிரியர்
- மஸீதா புன்னியாமீன் எழுத்தாளர், நூலாசிரியர்
வெளி இணைப்புக்கள்
- http://inioru.com/?p=4074
- http://news.lankasri.com/show-RUnxyHRYlDTci.html
- http://www.jaffnamuslim.com/2013/06/blog-post_199.html
- http://www.languagesdept.gov.lk/index.php?option=com_translators&task=viewemore&cid[0]=90&lang=ta
- http://www.thinakaran.lk/vaaramanjari/2009/12/06/?fn=s0912065&p=1
- http://www.adaderana.lk/tamil/news.php?nid=17085