நீலப்பச்சைப்பாசி (உணவுக் குறைநிரப்பி)

நீலப்பச்சைப்பாசி (Spirulina) அல்லது நீலப்பச்சைப்பாக்டீரியா என அழைக்கப்படும் நுண்ணுயிரி சயனோபாக்டீரியா (Cyanobacteria) மனிதர்களாலும், விலங்குகளாலும் உண்ணத்தக்கவையாகும். முதன்மையாக, இரண்டு சயனோபாக்டீரியா இனங்கள் (ஆர்த்ரோஸ்பைரா பிளாட்டென்சிஸ், ஆர்த்ரோஸ்பைரா மேக்சிமா) உணவுக் குறைநிரப்பிகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் நீலப்பச்சைப்பாசி வளர்க்கப்படுகிறது. இவை, உணவுக் குறைநிரப்பிகளாகவும், முழு உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. நீலப்பச்சைப்பாசி மாத்திரைகளாகவும், அவலாகவும், பொடியாகவும் கிடைகின்றது. இவை மீன்வளர்ப்பிலும், மீன் காட்சியகங்கள், கோழிப்பண்ணைகளிலும் தீவனக் குறைநிரப்பியாகப் பயன்படுத்தப்படுகின்றது[1].

உலர்ந்த நீலப்பச்சைப்பாசி
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 290 kcal   1210 kJ
மாப்பொருள்     23.9 கி
- சர்க்கரை  3.1 கி
- நார்ப்பொருள் (உணவு)  3.6 கி  
கொழுப்பு7.72 கி
- நிறைவுற்ற கொழுப்பு  2.65 g
- ஒற்றைநிறைவுறா கொழுப்பு  0.675 g  
- பல்நிறைவுறா கொழுப்பு  2.08 g  
புரதம் 57.47 கி
நீர்4.68 கி
உயிர்ச்சத்து ஏ  29 μg3%
தயமின்  2.38 mg  183%
ரிபோஃபிளாவின்  3.67 mg  245%
நியாசின்  12.82 mg  85%
பான்டோதெனிக் அமிலம்  3.48 mg 70%
உயிர்ச்சத்து பி6  0.364 mg28%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  94 μg 24%
உயிர்ச்சத்து பி12  0 μg  0%
உயிர்ச்சத்து சி  10.1 mg17%
உயிர்ச்சத்து டி  0 IU0%
உயிர்ச்சத்து ஈ  5 mg33%
உயிர்ச்சத்து கே  25.5 μg24%
மக்னீசியம்  195 mg53% 
பாசுபரசு  118 mg17%
பொட்டாசியம்  1363 mg  29%
சோடியம்  1048 mg70%
துத்தநாகம்  2 mg20%
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

இது ஒன்றுக்கும் மேற்பட்ட செல்களால் ஆன நுண்ணிய உடல் அமைப்பு கொண்ட அர்த்ரோஸ்பைரா (Arthrospira) என்ற நீலப்பச்சைப்பாசி வகையைச் சேர்ந்த பாசியைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தப் பாசி வகையை வெறும் கண்களால் பார்க்க இயலாது. இது ஓரளவு உப்பு மற்றும் காரத் தன்மை உடைய நீரில் வளரக்கூடியது. இதற்கு 1927-ம் ஆண்டு ஒரு செருமனிய அறிவியலாளரால் ஸ்பைருலினா என்று பெயரிடப்பட்டது. ஆனால் இப்பெயருக்கும் ஸ்பைருலினா என்ற பேரினத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. உலகம் முழுவதும் இதில் சுமார் 30,000 வகைகள் உள்ளன. இது பாசி வகையை சேர்ந்த புராதன உயிரினம். ஸ்பைருலினாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனித உடலில் உள்ள செல்களால் சுலபமாக உறிஞ்சப்படும் நிலையில் உள்ளது.

மற்ற உணவுப் பொருள்களை விட அதிக புரதச்சத்து நிறைந்துள்ளது. இந்த பாசி உடல் ஆரோக்கியத்தை பெருக்கும் மிக முக்கியமான உணவாகத் திகழ்கிறது. அதனால், விண்வெளிக்குச் செல்லும் வீரர்கள் இந்தப் பாசியையே உணவாக எடுத்துக் கொள்கின்றனர். மீன் உணவில் புரதச்சத்து அதிகம் இருப்பதற்கு அவை பாசிகளை முக்கிய உணவாகக் கொள்ளவதே காரணமாகும். இதை உணவாக பயன்படுத்தலாம்.

ஸ்பைருலினா கேப்சூல்: விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகள், பல நாட்கள் அங்கு தங்கி ஆய்வு பணியில் ஈடுபடும் போது, சாப்பாட்டிற்கு பதிலாக, "ஸ்பைருலினா கேப்சூல்'கள் தான் உட்கொள்கின்றனர். இந்த "ஸ்பைருலினா' கண்டுபிடிக்கப்பட்டதற்கான காரணம், தென் ஆப்பிரிக்காவில் கடும் பஞ்சம் ஏற்பட்ட போது, மடகாஸ்கர் பகுதியில் உள்ளவர்கள், தண்ணீரை மட்டும் குடித்து உயிர் வாழ்ந்தனர். இதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தண்ணீரில் ஸ்பைருலினா என்ற பச்சைய பொருள் இருப்பதை கண்டனர். இதில் புரதம் 65%, கொழுப்பு 5%, கார்போஹைட்ரேட் 20% உள்ளது. மேலும், இதில் காமா-லினோலெனிக் அமிலமும் உள்ளது.

வெளியிணைப்புகள்

  • "Blue-green Algae". MedlinePlus. National Institutes of Health (December 2011).
  • "Blue-green Algae". Memorial Sloan-Kettering Cancer Center (December 2011).
  • "Spirulina". University of Maryland Medical Center (June 2011).
  • "Spirulina". Beth Israel Deaconess Medical Center (August 2011).

மேற்கோள்கள்

  1. Vonshak, A. (ed.). Spirulina platensis (Arthrospira): Physiology, Cell-biology and Biotechnology. London: Taylor & Francis, 1997.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.