பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம்
பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் (புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலை, ஓகஸ்ட் 7, 1895)[1] இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறையில் அமைந்துள்ள ஒரு பாடசாலை. சைவத்தையும், தமிழையும், ஆங்கில மொழியையும், கல்வியையும் வளர்ப்பதற்காக சைவப் பெரியாரும், கல்விமானுமாகிய வைரமுத்து வேலாயுதம்பிள்ளையினால் 1895 ஆம் ஆண்டு ஆடிப்பூரத்திலன்று ஆரம்பிக்கப்பட்டது.
நோக்கம்
இப்பாடசாலை அனைத்துத் தர பிள்ளைகளும் சைவச்சூழலில் ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று உயர்கல்வியைப் பெறவும் உருவாக்கப்பட்டது. பல ஆன்மிகவாதிகளையும், அருளாளர்களையும், அறிவாளிகளையும் அரசியல்வாதிகளையும், ஆற்றல் மிகு அதிகாரிகளையும் உருவாக்கியது.
வரலாறு
வேலாயுதம் மகாவித்தியாலயம் வடமராட்சியில் புலோலி கிழக்கில் வாழ்ந்த ஆசிரியரான வைரமுத்து லோயுதம்பிள்ளையினால் ஆகஸ்ட் 7, 1895 ஆம் ஆண்டு அவரது இல்லத்தில் புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலை என்ற பெயரில் 14 மாணவர்களுடன் ஆரம்பிக்கப் பட்டது. ஐந்து ஆண்டுகளின் பின்னரே இது அரசபாடசாலையாக அங்கீகாரம் பெற்றது. டிசம்பர் 12, 1961 இல் இப்பாடசாலையை அரசு பொறுப்பேற்றது. செப்டெம்பர் 18, 1976 இல் இப்பாடசாலையின் பெயர் வேலாயுதம் மகாவித்தியாலயம் என மாற்றம் பெற்றது.[2]
புலோலி ஆண்கள் ஆங்கில பாடசாலை என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று இக்கல்லூரியின் நிறுவனர் வேலாயுதத்தின் பெயரால் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் என அழைக்கப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் இங்கு எட்டாம் வகுப்பு வரையே கல்வி போதிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டளவில் தான் முதல் முதலாக இங்கு க.பொ.த (சாதாரண) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இக் காலத்தில் தான் முதல் முதலாக அறிவியல் பாடங்களும், ஆய்வுகூடங்களும் திறக்கப்பட்டன.
அதிபர்கள்
- வை. வேலாயுதம்பிள்ளை – (1895)
- S. பாலகிருஸ்ணஐயர்
- S. சிவசுப்பிரமணியஐயர்
- க. சுப்பிரமணியம்
- S. சிவபாதசுந்தரம்
- K. சுந்தராச்சாரி
- வே. அருணாசலம் - (1939 - 1946)
- பசுபதிஐயர் – (1946)
- ஏ. நடராஜா – (1946)
- வே. நடராசா
- த. இராமநாதபிள்ளை (1947 – 1961)
- மு. ஆ. தங்கராஜா – (1961 – 1970)
- வ. தம்பிப்பிள்ளை – (1971 - 1977)
- இ. சே. ஏகாம்பரநாதன் (1977- 1991)
- சி. தேவராசா (1991 – 1994)
- .இ. ஞானசேகரம்பிள்ளை – (1994 – 2001)
- ஆ. ஜெகநாதன் - (2001 – 2009)
ஆசிரியர்கள்
- ச.கணபதிப்பிள்ளை
- வே.காசிநாதர்
- க.உலகநாதர்
- வே. முருகேசபிள்ளை
- கனகசபாபதி
- பொ.சபாரத்தினம்
- கேரளாவில் இருந்து இலங்கை வந்த இராமகிருஷ்ணப் பனிக்கர்
- இராஜகோபால் (M.A)
- க.துரைரத்தினம்
இக்கல்லூரியில் 1951 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியராகக் கடமையாற்றிய க. துரைரத்தினம் இலங்கையில் பிற்காலத்தில் பருத்தித்துறைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.