வேல ராமமூர்த்தி

வேல ராமமூர்த்தி (Vela Ramamoorthy) ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பெருநாழியில் பிறந்தவர்.[1][1] தற்போ இவர் பாயும் புலி (2015 திரைப்படம்) மற்றும் சேதுபதி (2016 திரைப்படம்) ஆகியவற்றில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர், நாடகம், தொழிற்சங்கம், அறிவியல் இயக்கம், சினிமா என்று பல்துறை வாழ்வியல் அனுபவங்கள் கொண்டவர்.[2]

நீளும் ரெக்கை, வேட்டை போன்றவை இவரது சிறுகதை நுால்களாகும். பட்டத்து யானை, குற்றப்பரம்பரை (முன்னதாக கூட்டாஞ்சோறு என அழைக்கப்பட்டது) மற்றும் குருதி ஆட்டம் ஆகியவை இவரது நாவல்களாகும். இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு வேல ராமமூர்த்தி கதைகள் என வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் வாழ்க்கை

இவர் கல்லூரி புதுமுக வகுப்பு பயின்றவர். இவரை இந்தி எதிர்ப்புப் போராட்டம் பொதுவெளிக்குக் கொண்டு வந்ததாகவும், பெருநாழி கிராம நுாலகத்தில் இருந்த இருசிய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் மற்றும் மலையாள மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் இவருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிடுகிறார். ஜார்ஜ் புலிட்சர் எழுதிய ‘மார்க்சிய மெய்ஞானம்’ என்ற நூலைப் படித்த பின்பு, அரசியல் பற்றிய இவரது பார்வை அடியோடு மாறிப்போனதாகவும் குறிப்பிடுகிறார்.இவர் இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு, அஞ்சலகத்தில் பணியாற்றினார். கடந்த 40 ஆண்டுகளில் 45 சிறுகதைகள், இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். இவர் ஒரு எழுத்தாளராக இருப்பதால், இவரை சந்திக்க  ஏராளமானோர் அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர். புதிய  தலைமுறை தமிழ் இதழுக்களித்த பேட்டியில் "எனது சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட சம்பளத்தை தேநீர்க் கடைகளிலேயே செலவழித்துள்ளேன்” என்று கூறியுள்ளார். வேல ராமமூர்த்தி புகழ் பெற்ற தமிழ் நாவல்களான குற்ற பரம்பரை மற்றும் குருதி ஆட்டம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராக வேல ராமமூர்த்தி கருதப்படுகிறார்.[3][4] இவர் பாரதிராஜா மற்றும் இயக்குநர் பாலா ஆகியோருக்கிடையே குற்ற பரம்பரை கதையை திரைப்படமாக்குவது தொடர்பான வழக்கில் தொடர்புடையவர் ஆகிறார். இவர் இக்கதையை திரைப்படமாக்கும் உரிமை தொடர்பான பிரச்சனையில் பாலாவை ஆதரிக்கிறார். [5]

2010 களின் நடுப்பகுதியில் இவர் ஒரு நடிகராகத் தோற்றமளிக்கத் தொடங்கினார். அதிலிருந்து தொடர்ந்து துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதில், கொம்பன் (2015), பாயும் புலி (2015) மற்றும் சேதுபதி (2016) ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.[6][7]

குற்றப்பரம்பரை

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானியர் இந்தியா முழுமையும் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் ஒருபுறம் கல்விக் கூடங்களில் ஆங்கில மொழி கற்பிக்கப்பட்டு அரசாங்கப் பணிக்கான ஆள்சேர்ப்பு நடந்தது. மறுபுறம், சரியாகக் கல்வி கிடைக்காதவர்கள் தங்களின் குலத்தொழிலைத் தொடர்ந்து வந்தனர். வறுமையின் காரணத்தால் சில சாதியினர் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற செயல்களையும் செய்து வந்தனர். அவர்களை ஒடுக்க அல்லது சீர்திருத்தம் செய்ய 1871ஆம் ஆண்டில் இந்தியா முழுமையும் குறிப்பிட்ட சில சாதிகளின் மீது குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1911ஆம் ஆண்டில் தமிழகத்தில் குற்றப்பரம்பரைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இக்குற்றப்பரம்பரைச் சட்டம் கொண்டு வரப்பட்டு ஒரு நூற்றாண்டு முடிந்த நிலையில் 1967ஆம் ஆண்டில் பொதுத்தேர்தலில் தோற்ற பிறகு 1971இல் தமிழகம் முழுவதும் கள்ளு, சாராயக்கடைகள் திறக்கப்பட்டதையும், விலக்கி வைக்கப்பட்டிருந்த மது மீண்டும் விற்பனைக்கு வந்த போது எல்லோரும் குடிக்கப் பழகி, மதுவுக்கு அறிமுகமாகி, மெல்ல மெல்ல அடிமையானதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் (1971) வேல ராமமூர்த்தி அம்மக்களின் வாழ்நிலை குறித்துச் சிறுகதையாக எழுதத் தொடங்கி பின் நாவலாக விரிவாக்கியுள்ளார்.[2]

திரைப்படங்களின் பட்டியல்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்பு
2013 மதயானைக் கூட்டம் வீரத்தேவர்
2015 கொம்பன் துரைப்பாண்டி
2015 பாயும் புலி ஜெயசீலனின் தந்தை
2016 ரஜினி முருகன் Murugan செல்லக்கருப்பன்
2016 ரா ரா ராஜசேகர்
2016 சேதுபதி வாத்தியார்
2016 அப்பா தயாளனின் மாமனார்
2016 கிடாரி கொம்பையா சிறந்த வில்லனுக்கான விகடன் விருது
2017 எய்தவன்
2017 வனமகன் ஜெயம் ரவியின் தந்தை
2017 தொண்டன் சமுத்திரக்கனியின் தந்தை
2017 அறம் சட்டப்பேரவை உறுப்பினர்
2017 வீரையன்
2018 ஸ்கெட்ச் ஜீவாவின் தந்தை 
2018 குலேபகாவலி 
2018 மதுர வீரன் குருமூர்த்தி
TBA எனை நோக்கி பாயும் தோட்டா [8]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.