குலேபகாவலி (2018 திரைப்படம்)
குலேபகாவலி கல்யாண் இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம்.[1][2] இந்தத்திரைப்படத்தினை கொட்டப்பாடி இராஜேஸ் தயாரித்துள்ளார். இப்படம் விவேக்-மெர்வின் இசையிலும் விஜய் வேல்குட்டி படத்தொகுப்பிலும் ஆர். எஸ். ஆனந்தகுமார் ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ளது.
குலேபகாவலி | |
---|---|
இயக்கம் | கல்யாண் |
தயாரிப்பு | கொட்டப்பாடி இராஜேஸ் |
கதை | கல்யாண் |
இசை | விவேக்-மெர்வின் |
நடிப்பு | பிரபுதேவா,ஹன்சிகா மோட்வானி, ரேவதி, மன்சூர் அலி கான், செந்தில், யோகி பாபு |
ஒளிப்பதிவு | ஆர். எஸ். ஆனந்தகுமார் |
படத்தொகுப்பு | விஜய் வேல்குட்டி |
விநியோகம் | மிசுரி எண்டர்பிரைசு |
வெளியீடு | 12 சனவரி 2018 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
கதை
ஒரு பிரிட்டிஷ்காரர் ஒருவரை ஏமாற்றி குலேபகாவலி என்னும் ஊரில் உள்ள ஒரு மறைவான இடத்தில் வைரங்களைப் புதைத்துவைக்கிறார் ஒருவர். அவரது பேரன் இந்த வைரத்தைத்தேடி அலையலைவதும், இன்னும் சில குழுக்களும் வைரத்தை தேடுவதும் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டுள்ளது.[3]
நடிகர்கள்
குலேபகாவலி திரைப்படத்தில் பின்வரும் நடிகர்கள் நடித்துள்ளனர்.
- பிரபுதேவா
- ஹன்சிகா மோட்வானி
- ரேவதி
- ராம்தாஸ்
- ஆனந்த் ராஜ்
- யோகி பாபு[4]
சான்றுகள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.