வெள்ளியங்கிரி மலை
வெள்ளியங்கிரி மலை (Velliangiri Mountains) தமிழ்நாடு கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லபடுகிறது ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். அதிக மக்கள் நடமாட்டத்தால் வனவிலங்குகள் அங்கு இருப்பதை தவிர்க்கின்றன.
தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோவில்
வெள்ளியங்கிரி மலை | |
---|---|
![]() ![]() வெள்ளியங்கிரி மலை Location in Tamil Nadu | |
ஆள்கூறுகள்: | 10.9888°N 76.6873°E |
பெயர் | |
தமிழ்: | வெள்ளியங்கிரி மலை |
அமைவிடம் | |
நாடு: | India |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கோயம்புத்தூர் |
அமைவு: | கோயம்புத்தூர் |
ஏற்றம்: | 1,778 m (5,833 ft) |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சிவன் |
சிறப்பு திருவிழாக்கள்: | தமிழ் மற்றும் தெலுங்கு வருட பிறப்பு, சித்ரா பௌர்ணமி, கார்த்திகை விளக்கீடு[1] |
வரலாறு | |
அமைத்தவர்: | Natural formation |
வெள்ளி மலை
வெள்ளி மலை எனப்படும் வெள்ளியங்கிரியே கயிலை மலை என்று போற்றப்படுகிறது. உத்தர கயிலை, மத்திய கயிலை, தட்சிண கயிலை எனக் கயிலை மூன்றாகும். உத்தர கயிலை வடக்கே நீர்ப்பகுதியில் உள்ளது. மத்திய கயிலை இமயமலையில் உள்ளது. வெள்ளியங்கிரியே தட்சிய கயிலையாகும்.[2]
பேருந்து வசதி
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மலை அடிவாரமான பூண்டி என்னும் ஊர் வரை பேருந்து வசதி இருக்கிறது.
இவற்றையும் பார்க்க
உசாத்துணைகள்
- http://temple.dinamalar.com/en/new_en.php?id=1614
- ஆ.செல்லப்பா, உமையவள் உகந்த முக்கண்ணன் நடனம்,குமுதம் ஜோதிடம், 5. மார்ச் 2004
வெளி இணைப்புகள்
- தென் கைலாயம் வெள்ளியங்கிரி ஆண்டவர் மலை கோவில்
- Holidays for Soul – Velliangiri Hills - (ஆங்கில மொழியில்)
- தமிழ்நாடு சுற்றுலாத்துறை - (ஆங்கில மொழியில்)
- வெள்ளியங்கிரி மலை
- வெள்ளியங்கிரி மலைக்குப் போகலாமா?