வெளி

வெளி (Space) என்பது எழுத்துகளையோ சொற்களையோ இலக்கங்களையோ நிறுத்தக்குறிகளையோ பிரிப்பதற்காக வழங்கப்படும் வெற்றுப்பரப்பு ஆகும்.[1]

வெளி
நிறுத்தக்குறிகள்
தனி மேற்கோள் குறி( ’ ' )
அடைப்புக் குறிகள் ( [ ], ( ), { },   )
முக்காற்புள்ளி( : )
காற்புள்ளி( , )
இணைப்புக்கோடு ( , –, —, ― )
முப்புள்ளி ( …, ..., . . . )
உணர்ச்சிக்குறி( ! )
முற்றுப்புள்ளி( . )
கில்லெமெட்டு( « » )
இணைப்புச் சிறு கோடு( )
கழித்தல் குறி( - )
கேள்விக்குறி( ? )
மேற்கோட்குறிகள் (  ’, “ ”, ' ', " " )
அரைப்புள்ளி( ; )
சாய்கோடு( /,    )
சொற்பிரிப்புகள்
வெளி ( ) () ()
மையப் புள்ளி( · )
பொது அச்சுக்கலை
உம்மைக் குறி( & )
வீதக் குறி( @ )
உடுக்குறி( * )
இடம் சாய்கோடு( \ )
பொட்டு( )
கூரைக் குறி( ^ )
கூரச்சுக் குறி ( †, ‡ )
பாகைக் குறி( ° )
மேற்படிக்குறி( )
தலைகீழ் உணர்ச்சிக் குறி( ¡ )
தலைகீழ் கேள்விக் குறி( ¿ )
எண் குறியீடு( # )
இலக்கக் குறியீடு ( )
வகுத்தல் குறி( ÷ )
வரிசையெண் காட்டி ( º, ª )
விழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, )
பத்திக் குறியீடு( )
அளவுக் குறி( ′, ″, ‴ )
பிரிவுக் குறி( § )
தலை பெய் குறி( ~ )
அடிக்கோடு( _ )
குத்துக் கோடு( ¦, | )
அறிவுசார் சொத்துரிமை
பதிப்புரிமைக் குறி( © )
பதிவு செய்யப்பட்ட வணிகக் குறி( ® )
ஒலிப் பதிவுப் பதிப்புரிமை( )
சேவைக் குறி( )
வர்த்தகச் சின்னம்( )
Currency
நாணயம் (பொது) ( ¤ )
நாணயம் (குறிப்பிட்ட)
( ฿ ¢ $ ƒ £ ¥ )
பிரபல்யமற்ற அச்சுக்கலை
மூவிண்மீன் குறி( )
டி குறி( )
செங்குத்துக் குறியீடு( )
சுட்டுக் குறி( )
ஆகவே குறி( )
ஆனால் குறி( )
கேள்வி-வியப்புக் குறி( )
வஞ்சப்புகழ்ச்சிக் குறி( ؟ )
வைர வடிவம்( )
உசாத்துணைக் குறி( )
மேல்வளைவுக் குறி( )
சம்பந்தப்பட்டவை
இரட்டைத் திறனாய்வுக் குறிகள்
வெள்ளை இடைவெளி வரியுரு
ஏனைய வரி வடிவங்கள்
சீன நிறுத்தக்குறி

பண்டைய காலத்தில், சொற்களைப் பிரிப்பதற்காக இலத்தீன் மொழியில் மையப் புள்ளி பயன்படுத்தப்பட்டது.[2] பின்னர், கி. பி. 200 அளவில் தொடருரையின் தாக்கத்தினால் சொற்பிரிப்புகளேயின்றிச் சொற்கள் எழுதப்பட்டன. அதன் பின்னர், கி. பி. 600-800 காலப்பகுதியில் சொற்களைப் பிரிப்பதற்காக வெற்று வெளிகள் பயன்படுத்தப்படத் தொடங்கின. அதிலிருந்து இலத்தீன் நெடுங்கணக்கை அடிப்படையாகக் கொண்ட மொழிகளிலும் வெளிகள் பயன்படுத்தப்பட்டன.

பயன்பாடுகள்

சொற்களுக்கிடையிலான வெளி

தமிழ் மொழியிலும் புதிய ஆங்கிலத்திலும் சொற்களைப் பிரிப்பதற்கு வெளிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இது தமிழ் விக்கிப்பீடியா.
This is Tamil Wikipedia.

ஆனால், எல்லா மொழிகளும் சொற்களைப் பிரிப்பதற்கு வெளிகளைப் பயன்படுத்துவதில்லை (எ-டு: நவீன சீனம், சப்பானியம்).

சொற்றொடர்களுக்கிடையிலான வெளி

பொதுவாக, சொற்றொடர்களுக்கிடையில் விடப்படும் வெளிகள் மூன்று வகைகளில் விடப்படும். சொற்றொடர்களுக்கிடையில் ஒரு வெளியோ இரு வெளியோ ஓரகல வெளியோ விடப்படுவதுண்டு. சொற்றொடர்களுக்கிடையில் வெளிகளை விடாதும் எழுதுவதுண்டு.

வெளிகளும் அலகுக் குறியீடுகளும்

ஆங்கிலத்தில் குறியீடுகளை எழுதும்போது முன்னொட்டுக் குறியீடுகளுக்கும் அலகுக் குறியீடுகளுக்கும் இடையே வெளி விடப்படுவதில்லை.

15 cm

13 kPa

235 ml

அளவுக்கும் எழுத்தை முதலாகக் கொண்ட குறியீட்டுக்கும் இடையே ஒரு வெளி விடப்பட வேண்டும்.

அதாவது,

45kg-தவறு

45 kg-சரி

குறியீட்டில் முதலில் எழுத்தில்லாவிடின், அளவுக்கும் குறியீட்டுக்கும் வெளி விடாமலும் எழுதலாம்.

32° C-தவறு

32°C-சரி

32 °C-சரி

ஆனாலும் கோணங்களின் பெறுமானத்தைக் குறிக்கும்போது வெளி விடக்கூடாது.

90 °-தவறு

90°-சரி

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.