வெடியூசி (சுடுகலன்)

வெடியூசி (firing pin, ஃபையரிங் பின்) அல்லது அடிப்பான்(striker, ஸ்ட்ரைக்கர்) என்பது, சுடுகலன் அல்லது (எம்14 கண்ணிவெடி போன்ற) வெடிகளில் உள்ள, வெடிக்கும் இயக்கமுறையின் ஒரு கூறு / பாகம் ஆகும்.

ஒருங்கிணைந்த வெடியூசியை காட்டும், எம்14 ஆட்களுக்கான மிதிவெடியின் உட்புற தோற்றம்.
எம்1911 கைத்துப்பாக்கியின் விசைத்திரள் / விசை இயங்குமுறை. வெடியூசியை படத்தில் கவனிக்கவும்.

(மிதிவெடிகள், எறிகணைகள், கொத்துக் குண்டுகள் மற்றும் கையெறிகுண்டுகள் முதலியன போன்ற) ஒருமுறை-உபயோக சாதனங்களுக்கான வெடித்தூண்டியில் (fuze) பயன்படுத்தப்படும் வெடியூசி, கூரான முனையுடன் இருக்கும். மாறாக, சுடுகலன்களில் உள்ள வெடியூசிகள், வெடிபொதியின் எரியூட்டியை அடிக்க ஏற்றவாறு சிறிய, வட்டமுனையுடன் வடிவமைக்கப் பட்டிருக்கும்.[1][2][3] 

பொதுவாக எஃகு, அலுமினியக் கலப்புலோகம், அல்லது தைட்டானியம் ஆகியவற்றால் வெடியூசிகளும், அடிப்பான்களும் செய்யப்படும். குறைவுலோக மிதிவெடிகளைப் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில், கண்ணாடிப் பீங்கான் போன்று உலோகமில்லா பொருட்கள் பயன்படுத்தப்படும்.

வெடியூசி - அடிப்பான் வேறுபாடு 

சுமித் அண்டு வெஸ்ஸன் மாடல் 13 சுழல்-கைத்துப்பாக்கியின், ஒருங்கிணைந்த வெடியூசியைக் கொண்ட சுத்தியல்

வெடியூசி என்பது, சுருள்வில்-பூட்டிய சுத்தியலின் ஆற்றலை எரியூட்டிக்கு வழங்கும், ஒரு எடைகுறைவான கூறு ஆகும். மேலும், அடிப்பான் என்பது நேரடியாக சுருள்வில்லுடன் பூட்டப்பட்டிருப்பதால், அதுவேதான் எரியூட்டியை தாக்கி ஆற்றலை வழங்கும்; இதன் எடை வெடியூசியைவிட அதிகமாக இருக்கும். சுத்தியல் மற்றும் வெடியூசியின் செயல்பாடுகள், அடிப்பானில் ஒருங்கிணைவதால்; அடிப்பான் இயங்குமுறைகள் பொதுவாகவே எளிமையாக இருக்கும்.[1] 

பொதுவாக, தொடர்ந்துசுடும் சுடுகலனின் ஆணியில், வெடியூசி அல்லது அடிப்பான் அமைந்திருக்கும். ஆணியில்லாத, சுழல்-கைத்துப்பாக்கிகள் மற்றும் பலவகையிலான ஒற்றைக்குண்டு இயக்கங்களில் மிகச்சிறிய வெடியூசி, அல்லது சுத்தியலோடு இணைந்த  வெடியூசி இருக்கும். இவ்வகை சுடுகலங்கள் பெருபாலனவை, அடிப்பானை கொண்டிருப்பது இல்லை, ஏனெனில் அடிப்பான் இயங்குமுறையை அதில் பொறுத்த  போதுமான இடம் இருப்பதில்லை. அரை-தானியக்க கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆணி-இயக்க சுடுகலங்களில் அடிப்பான்களை காணலாம்.[1]

வெடியூசியின் உரு  

மௌசெர் எம் 98-ன் ஆணி, வெடியூசி மற்றும் பாதுகாப்பு இயங்குமுறை தனித்தனியாக பிரிக்கப்பட்டு உள்ளது.

ஒரு வழக்கமான வெடியூசி என்பது, எரியூட்டியை அடிக்க ஏற்றவாறு அரைகோள வடிவிலுள்ள முனை உடைய, ஒரு சிறு கம்பி ஆகும்.

அடிப்பானின் உரு 

அடிப்படையில் அடிப்பாங்கள் சுருள்வில்-பூட்டிய வெடியூசிகளே ஆகும், பொதுவாக ஒன்று- அல்லது இரு-கூறுகளாக இருக்கும்.

படங்கள் 

மேற்கோள்கள் 

  1. Charles E. Petty. "XD X-Deelicious!". American Cop. மூல முகவரியிலிருந்து July 23, 2008 அன்று பரணிடப்பட்டது.
  2. "SAAMI Glossary, F". SAAMI.
  3. "SAAMI Glossary, S". SAAMI.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.