எறிகணை
எறிகணை (shell) என்பது ஏவப்படும் ஒரு வெடிபொருள். வெடிமருந்து கொண்டதாக வெடித்துப் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. ஆட்டிலரி, டாங்கிகள், போர்க்கப்பல்கள் போன்றவற்றால் ஏவப்படுகிறது.
வெடிக்கும் எறிகணைகள் 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்பே அறிமுகமாகின. 1823 இல் வெடிக்கும் எறிகணைகளை ஏவக்கூடிய துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. 1840களில் பல கடற்படைகள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கின. இதனால் மரத்தாலான கப்பல்கள் மதிப்பிழந்தன. கப்பல் உற்பத்தியில் இரும்பு பயன்படுத்தப்படத் தொடங்கியது.
ஈழப்போரில் எறிகணைகள்
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் இலங்கை இராணுவத்தினராலும், இந்திய அமைதிப் படையினராலும் எறிகணைகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இலட்சக்கணக்கானோர் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.