விஜய பாஸ்கர்

விஜயபாஸ்கர் (Vijaya Bhaskar, கன்னடம்: ವಿಜಯಭಾಸ್ಕರ್; 1924–2002)[1] தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, கொங்கணி உட்பட்ட பன்மொழிகளில் திரைப்படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

விஜய பாஸ்கர்
Vijaya Bhaskar
பிறப்பு1924
பெங்களூர், மைசூர் அரசு, இந்தியா
இறப்பு3 மார்ச்சு 2002 (அகவை 7778)
பெங்களூர், கருநாடகம்
தொழில்(கள்)இசையமைப்பாளர், இசைக்கலைஞர்
இசைத்துறையில்1953–1986

விஜயபாஸ்கர் வயலின், வீணை, பியானோ ஆகிய இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றுக் கொண்டார். 50களின் ஆரம்பத்தில் மும்பாய் சென்று மதன்மோகன், நவுசாத்ஆகியோருக்கு இசை குறியீடுகள் எழுதிப் பணியாற்றினார். அவர்களுடைய பல பாடல்களுக்கு இவர் பியானோ இசை வாசித்துள்ளார். பி ஆர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இவரைக் கன்னட திரைப்படத்தில் இசையமைக்க வாய்ப்பு எடுத்துக் கொடுத்தார். 1953 ல் "ஸ்ரீ ராம பூஜா" திரைப்படத்திற்கு இசையமைத்தார். இந்தித் திரைப்படங்களை பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தன.

இயக்குனர் புட்டண்ணா கனகலுடன் இணைந்து நிறைய படங்களுக்கு இசையமைத்தார். "நகரபாவு" (தமிழில் ராஜநாகம்) பெரும் வெற்றி பெற்றது. நகரபாவு வெற்றிக்கு பிறகு சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி மூலம் தமிழுக்கு வந்தார். ஸ்ரீதர், எஸ். பி. முத்துராமன், கே. பாலச்சந்தர் படங்களுக்கு இசையமைத்து தமிழகத்திலும் பிரபலமானார். ஏழு முறை சிறந்த கன்னட இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார்.

இசையமைத்த தமிழ்ப் படங்கள்

இசையமைத்த சில புகழ்பெற்ற பாடல்கள்

  • மணமகளே உன் மணவறைக்கோலம் (காலங்களில் அவள் வசந்தம், வாணி ஜெயராம்)
  • பாடும் வண்டே பார்த்ததுண்டா (காலங்களில் அவள் வசந்தம், வாணி ஜெயராம்)
  • அன்பு மேகமே (எங்கம்மா சபதம், எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம்)
  • சம்சாரம் என்பது வீணை (மயக்குகிறாள் ஒரு மாது - எஸ்பிபி - கண்ணதாசன்)
  • ஒரு புறம் வேடன் (மயக்குகிறாள் ஒரு மாது - எஸ்பிபி & வாணி ஜெயராம் - கண்ணதாசன்)
  • வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் (மயக்குகிறாள் ஒரு மாது, கே. ஜே. ஜேசுதாஸ் - கண்ணதாசன்)

மேற்கோள்கள்

  1. "Vijaya Bhaskar profile". kannadamoviesinfo.wordpress.com. பார்த்த நாள் 17-12-2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.