வி. ஐ. முனுசாமி பிள்ளை

ராவ் சாகிப் வி. ஐ. முனுசாமி பிள்ளை (பி. 1889 - இ. டிசம்பர் 14, 1953) ஒரு தமிழக அரசியல்வாதி. (முனிசாமி பிள்ளை எனவும் சில இடங்களில் இவரது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது). இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த இவர் 1937-39 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் மாநில அமைச்சரவையில் இடம் பெற்றார்.

ராவ் சாகிப்

வி. ஐ. முனுசாமி பிள்ளை
1938 அரிதுவார் காங்கிரசு இதழில் பிள்ளையின் படம்
செனை மாகாண விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்
பதவியில்
ஜூலை 14, 1937  அக்டோபர் 9, 1939
Premier சி. ராஜகோபாலச்சாரி
ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு
தனிநபர் தகவல்
பிறப்பு 1889
உதகமண்டலம், சென்னை மாகாணம்
இறப்பு டிசம்பர் 14, 1953
சென்னை
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு

வாழ்க்கைக் குறிப்பு

1889ல் உதகமண்டலத்தில் ஒரு ஏழை பறையர் குடும்பத்தில் பிறந்த முனுசாமி வறுமையின் காரணமாக படிப்பினை நிறுத்தி விட்டு இளவயதிலேயே எழுத்தர் வேலையில் சேர்ந்தார். பின் 1925ல் சொந்தமாக தொழில் தொடங்கினார். 1926ல் ஆதிதிராவிட மக்களின் பிரதிநிதியாக சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்டார். 1937-39ல் அமைந்த ராஜாஜி அமைச்சரவையில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1939ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியா ஈடுபடுத்தப்பட்டதைக் கண்டித்து இந்தியா முழுவதும் காங்கிரசு அமைச்சரவைகள் பதவி விலகின. இத்துடன் முனுசாமியும் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின் 1946ல் மீண்டும் அரசியலில் நுழைந்த அவர் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுபின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு சார்பில் திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1953ல் இவர் மரணமடைந்த போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு சிறப்பு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.