சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1952
இந்தியக் குடியரசின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1952 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. 21 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் வாக்குரிமை முறை அமலுக்கு வந்தபின் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவே. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 35 தொகுதிகளில் வென்று முதலிடத்தில் வந்தது. இத்தேர்தல் 1951 ஆம் ஆண்டே நடைபெற இருந்தது. ஆனால் நிர்வாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு 1952 இல் நடைபெற்றது. எனவே இத்தேர்தல் சில ஆவணங்களில் "இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1951" என்றும் குறிப்பிடப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு முதலாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது.
![]() | ||||||||||||||||
| ||||||||||||||||
மக்களவைக்கான 75 இடங்கள் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||
|
பின்புலம்
சென்னை மாநிலத்தில் மொத்தம் 63 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 49 தலா ஒரு உறுப்பினரையும் மீதமுள்ள 13 தலா இரண்டு உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்தன.
முடிவுகள்
காங்கிரசு | இடங்கள் | கம்யூனிஸ்ட் | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 29 | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி | 8 | சுயேட்சைகள் | 15 |
சோஷ்யலிஸ்ட் கட்சி | 2 | கிசான் மசுதூர் பிரஜா கட்சி | 6 | ||
தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 4 | ||||
காமன்வீல் கட்சி | 3 | ||||
பார்வார்டு ப்ளாக் | 1 | ||||
முஸ்லீம் லீக் | 1 | ||||
மொத்தம் (1952) | 35 | மொத்தம் (1952) | 10 | மொத்தம் (1952) | 30 |
இவற்றையும் பார்க்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.