இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் (Constituent Assembly of India) இந்தியாவின் அரசியலமைப்பினை தொகுக்கவும் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் நாடாளுமன்றமாக பணியாற்றவும் தேர்ந்தெடுக்கப்பட்டது.[1]

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்
வகை
நிறுவிய ஆண்டு6 திசம்பர் 1946 (1946-12-06)
வகைஒற்றை அவை
தலைமை
தற்காலிக பெருந்தலைவர்சச்சிதானந்த சின்கா, (இந்திய தேசிய காங்கிரசு)
தலைவர்இராசேந்திர பிரசாத், (இந்திய தேசிய காங்கிரசு)
அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்அம்பேத்கர், (பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு)
துணைத் தலைவர்கள்ஹரேந்திர கூமர் முகர்ஜி
வி. டி. கிருஷ்ணமாச்சாரி
சட்ட ஆலோசகர்பனகல் நரசிங் ராவ் (B. N. Rau)
அமைப்பு
அரசியல் குழுக்கள்
  இதேகா: 208 இடங்கள்
  அஇமுலீக்: 73 இடங்கள்
  பிறர்: 15 இடங்கள்
Voting systemFirst-past-the-post voting
கூடும் இடம்
அரசியல் நிர்ணய மன்றக் கூட்டத்தின் முதல் நாள் கூட்டத்தின் நாள்: 9 டிசம்பர் 1946, வலது புறத்திலிருந்து:பி. ஜி. கெர் மற்றும் சர்தார் வல்லபாய் படேல்; படேலின் பின்பாக கே. எம். முன்ஷி, நாடாளுமன்ற வளாகம், புது தில்லி

தேர்தல்

இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் பிரித்தானிய ஆய குழுவினருக்கும், இந்தியத் தலைவர்களுக்கும் இடையேயான புரிந்துணர்வின் விளைவாக உருவாக்கப்பட்டது. இம்மன்றத்தின் உறுப்பினர்கள் மறைமுகமாக சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம், வங்காள மாகாணம், ஐக்கிய மாகாணம், மத்திய மாகாணம், கிழக்கு பஞ்சாப், பிகார், அசாம் மற்றும் ஒடிசா மாகாண சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு பொதுத் தொகுதிகளில் 208 இடங்களைப் கைப்பற்றி பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்தது. அகில இந்திய முஸ்லிம் லீக் இசுலாமியர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 73 இடங்களில் வெற்றி பெற்றது. சிறுபான்மைக் கட்சிகளான பட்டியல் சாதிகள் கூட்டமைப்பு, இந்தியப் பொதுவுடமைக் கட்சி மற்றும் பிற கட்சிகளுக்கு 15 இடங்களும், சுதேச சமஸ்தானங்களுக்கு 93 இடங்களும் கிடைத்தன.[2]

தில்லியில் திசம்பர் 9, 1946 அன்று முதல்முறையாகக் கூடியது. பிரித்தானியர் ஆட்சியிலிருந்ததால் அந்நாளைய மன்றத்தில் இன்றைய பாக்கித்தான், பங்களாதேசத்தின் மாநிலங்கள் மற்றும் சதேச சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் உள்ளடங்கியிருந்தது. சூன் 1947 முதல் சிந்து, கிழக்கு வங்காளம், பலுசிஸ்தான், மேற்கு பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணப் பிரதிநிதிகள் கராச்சியில் பாக்கித்தானின் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை அமைத்தனர்.

அரசியல் நிர்ணய மன்றத்தில் பதினைந்து மகளிர் உட்பட இருநூற்று ஏழு உறுப்பினர்கள் இருந்தனர். இறுதியில் இம்மன்றத்தில் 28 உறுப்பினர்களே இருந்தனர். பின்னர் 93 பிரதிநிதிகள் சுதேச சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய தேசிய காங்கிரசு 82% பெரும்பான்மை பெற்றிருந்தது.

காலக்கோடு

  • 9 டிசம்பர் 1946: அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் முதல் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. தனி நாடு கோரி இந்திய யுனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டத்தைப் புறக்கணித்தது. சச்சிதானந்த சின்கா கூட்டத்திற்கு தற்காலிக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 11 டிசம்பர் 1946: இராசேந்திர பிரசாத் அரசியல் அமைப்பு நிர்ணய மன்றத்தின் தலைவராகவும், ஹரேந்திர கூமர் முகர்ஜி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆலோசகராக பி. என். ராவ் நியமிக்கப்பட்டார்.
  • 13 டிசம்பர் 1946: மன்றத்தில் ஜவகர்லால் நேரு அரசியல் அமைப்புச் சட்டத்தின் குறிக்கோள் தீர்மானம் கொண்டு வந்தார்.
  • 22 ஜனவரி 1947: நேருவின் குறிக்கோள் தீர்மானம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 22 சூலை 1947: இந்திய தேசியக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • 15 ஆகஸ்டு 1947: இந்தியாவின் விடுதலை நாள்
  • 29 ஆகஸ்டு 1947: அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவு குழுவிற்கு அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  • 16 சூலை 1948: ஹரேந்திர கூமர் முகர்ஜி மற்றும் வி. டி. கிருஷ்ணமாச்சாரி அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் துணைத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
  • 26 நவம்பர் 1949: அம்பேத்கர் முன்மொழிந்த இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை அரசியலமைப்பு நிர்ண்ய மன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 24 ஜனவரி 1950: "ஜன கண மன எனத்துவங்கும் பாடலை இந்திய தேசிய கீதமாகவும்; வந்தே மாதரம் எனத்துவங்கும் பாடலை நாட்டுப் பாடலாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இராஜேந்திர பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும், சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை இயற்ற இரண்டு ஆண்டுகள், 11 மாதங்கள் மற்றும் 17 நாட்கள் ஆயிற்று. இதற்கு செலவான மொத்த தொகை ரூபாய் 6.4 மில்லியன் ஆகும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நிறைவேறல்

9 - 23 டிசம்பர், 1946 முதல் 14 - 26 நவம்பர், 1949 வரை நடைபெற்ற 11 கூட்டத்தொடர்களில் அரசியல் அமைப்புக் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது. இறுதியாக 26 நவம்பர் 1949ல் அம்பேத்கர் அரசியல் அமைப்பு சட்ட முன்மொழிவைத் தொகுத்தார். இதனை 24 சனவரி 1950ல் நடைபெற்ற பனிரெண்டாவது கூட்டத் தொடரில், நான்கில் மூன்று பகுதிக்கு மேற்பட்ட அரசியல் அமைப்பு நிர்ணய மன்ற உறுப்பினர்களால் கையொப்பமிட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், 26 ஜனவரி 1950 முதல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. எனவே 26, சனவரி நாளை குடியரசு நாளாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இந்திய நாடாளுமன்றம் உருவாதல்

2 செப்டம்பர் 1946 அன்று புதிய நிர்ணய மன்றத்திலிருந்து இந்தியாவின் இடைக்கால அரசு நிறுவப்பட்டது. 15 ஆகத்து 1947 அன்று இந்தியா விடுதலை பெற்ற பின்னர் இருந்த அரசியல் நிர்ணய மன்றமே, பின்னர் இந்திய நாடாளுமன்றமானது.

மேற்கோள்கள்

  1. FIRST DAY IN THE CONSTITUENT ASSEMBLY
  2. CONSTITUENT ASSEMBLY MEMBERSHIP

வெளியிணைப்புகள்

கூடுதல் பார்வைக்கு

  • கிரான்வில் ஆஸ்டின், The Indian constitution: Cornerstone of a Nation, ISBN 78019564958
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.