வேலணைத் தீவு

வேலணைத் தீவு (Velanai Island) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவு ஆகும். ஒல்லாந்தர் காலத்தில் இதற்கு லைடன் தீவு (Leiden Island) எனப் பெயர் வழங்கியது.

வேலணைத் தீவு

வேலணைத் தீவு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.638671°N 79.900406°E / 9.638671; 79.900406
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

பெயர்க்காரணம்

கி.பி. 1658 முதல் கி.பி. 1796 வரை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தர் யாழ்ப்பாணக் குடாநாட்டை அண்டியிருந்த தீவுகள் ஏழுக்கும் ஒல்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை இட்டார்கள். இவற்றில் தெற்கு ஒல்லாந்தில் உள்ள லெய்டன் (யாழ்ப்பாணத்தில் இப்பெயரை லைடன் என்றே உச்சரிப்பது வழக்கம்) நகரத்தின் பெயர் இத் தீவுக்கு வழங்கப்பட்டது.

முக்கிய ஊர்கள்

வேலணைத்தீவு அமைவிடம்

இங்கு பத்து கிராமங்கள் உண்டு, அவை பின்வருமாறு:

  1. சுருவில்
  2. நாரந்தனை
  3. கரம்பொன்
  4. ஊர்காவற்றுறை (காவலூர்)
  5. பரித்தியடைப்பு
  6. புளியங்கூடல்
  7. சரவணை
  8. வேலணை
  9. அல்லைப்பிட்டி
  10. மண்கும்பான்

இவற்றுள் ஊர்காவற்றுறை (காவலூர்) பிரித்தானியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் வடக்கு இலங்கையில் முக்கியத்துவம் பெற்றிருந்த துறை முகங்களில் ஒன்றாகும்.

லைடன் தீவின் கிராமங்களைப் பற்றியொரு பாடல் தொகுதி

வேலணைத்தீவு
ஊர்காவர்றுறை, கரம்பன், சுருவில்
உற்றநற் புளியங்குடல் நாரந்தனை
பேர்மிகு சரவணை, வேலனை மண்கும்பான்
பெருமை சொல் மண்டைத்தாவல் லைப் பிட்டி
சேர்ந்தே லைடன் தீவெனும் நிலமாம்.

(கவிஞர் சக்தி அ. பால. ஐயா)

அமைவிடமும், போக்குவரத்துத் தொடர்புகளும்

வேலணைத்தீவின் நேர் வடக்கே அமைந்துள்ளது காரைநகர் என்று பொதுவாக அழைக்கப்படும் காரைதீவு. தென் மேற்குத் திசையில் புங்குடுதீவும், தென் கிழக்குத் திசையில் மண்டைதீவும் அமைந்துள்ளன. மண்டைதீவு யாழ்ப்பாண நகரத்துக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் உள்ளது. வேலணைத்தீவு பண்ணை கடல் வழிச் சாலையினால், மண்டைதீவுக்கு ஊடாக யாழ்ப்பாண நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு, காரைதீவு என்பவற்றை இத் தீவுடன் இணைக்கும் கடல் வழிச் சாலைகளும் உண்டு.

இவற்றையும் பார்க்க

உசாத்துணைகள்

  • கா. சிவத்தம்பி, யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம், (2000).
  • சதாசிவம் சேவியர், சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்,(1997).
  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
  • சு. சிவநாயகமூர்த்தி, நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா,(2003).
  • இ. பாலசுந்தரம், இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை,(2002).

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.