லகாட் டத்து
லகாட் டத்து (Lahad Datu) மலேசியா, போர்னியோ, சபா மாநிலத்தில் உள்ள பிரதான நகரங்களில் ஒன்றாகும். இது தாவாவ் மாவட்டத்தில் ஒரு துணை மாவட்டமாகவும் விளங்குகிறது. சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 430 கி.மீ. தென் கிழக்கே இருக்கும் இந்த நகரில், இந்தோனேசியாவின் தாக்கத்தை அதிகமாகக் காண முடியும்.
லகாட் டத்து Lahad Datu لحد داتو 拉哈达图 | |
---|---|
![]() சபா மாநிலத்தில் அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
அமைவு | 1890 |
மக்கள்தொகை (2000) | |
• மொத்தம் | 1,56,059 |
நேர வலயம் | மலேசிய நேரம் ([[ஒசநே+8 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்]]) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு தவிர்க்கப்பட்டு உள்ளது (ஒசநே) |
இங்கு டூசுன் பூர்வீக இனத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழ்கின்றனர். லகாட் டத்துவின் சுற்றுப் பகுதிகளில் ஏராளமான கொக்கோ, எண்ணெய்ப் பனை தோட்டங்கள் உள்ளன. காட்டு மரங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத் துறைமுகமாகவும் விளங்குகிறது. உள்ளூர் பயணப் போக்குவரத்திற்காக இங்கு ஒரு விமான நிலையமும் உள்ளது.
2013 பிப்ரவரி 13ஆம் தேதி, இந்த லகாட் டத்து பட்டணத்திற்கு அருகில் இருக்கும் தண்டுவோ (ஆங்கிலம்:Tanduo) எனும் கிராமத்தை, சூலு சுல்தானகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட சிலர் ஆக்கிரமித்துக் கொண்டனர். இரு வாரங்கள் போராட்டத்திற்குப் பின்னர் மலேசியப் பாதுகாப்பு படையினர் அந்தக் கிராமத்தை மீட்டனர்.[1]