லகாட்
லகாட் (Lahat, சீனம்: 拉哈特), மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம், பத்து காஜா, மெங்லெம்பூ, பூசிங், பாப்பான், புக்கிட் மேரா போன்ற இடங்கள் உள்ளன. லகாட், ஈப்போ மாநகரத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இந்த நகரம் ஈப்போ மாநகர நகராண்மை எல்லைக்குள் இருக்கிறது.[1]
லகாட் Lahat 拉哈特 | |
---|---|
நாடு | ![]() |
உருவாக்கம் | லகாட்: 1840 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,500 |
நேர வலயம் | MST (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
சித்தியாவான், லூமுட் போன்ற நகரங்களை ஈப்போவுடன் இணைக்கும் நெடுஞ்சாலை, லகாட் நகரத்தில் இருந்து மிக அருகாமையில் இருக்கிறது. இங்கே இரு சாலைகள் மட்டுமே உள்ளன.
1900களில் ஈய உற்பத்தியில் இந்த நகரம் பிரசித்தி பெற்று விளங்கியது. இந்தியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆனால், சீக்கியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள், இங்குள்ள ஈயச் சுரங்கங்களில் முன்பு வேலை செய்தனர்.
பொது
லகாட் நகரத்திற்கு அருகில் நான்கு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. 10 கி.மீ. தொலைவில் பிஞ்சி தோட்டம், 13 கி.மீ. தொலைவில் டூசுன் பெர்த்தாம் தோட்டம், 14 கி.மீ. தொலைவில் மெராந்தி லாப்பான் தோட்டம், 17 கி.மீ. தொலவில் பத்து டுவா தோட்டம் ஆகிய தோட்டங்கள் உள்ளன. இங்கு முன்பு நிறைய இந்தியர்கள் வாழ்ந்தனர்.
ஆனால், ஈப்போ மாநகரம் துரிதமான வளர்ச்சி அடைந்ததால், இந்தத் தோட்டங்களில் வாழ்ந்த இந்தியர்கள் வேறு இடங்களுக்கு மாறிச் சென்று விட்டனர். அத்தோட்டங்களில் வங்காளதேசம், இந்தோனேசியாவைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் வேலை செய்கின்றனர்.