பாப்பான்

பாப்பான் (Papan, சீனம்: 董事会), மலேசியா, பேராக், கிந்தாமாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இதற்கு அருகாமையில் ஈப்போ மாநகரம், பத்து காஜா, மெங்லெம்பூ, பூசிங், லகாட், புக்கிட் மேரா போன்ற இடங்கள் உள்ளன. பாப்பான், ஈப்போ மாநகரத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சீனாவில் இருந்து வந்த சீனர்கள் இங்கு ஈயம் தோண்டி எடுத்தனர். 1970களில் ஈய உற்பத்தி ஒரு முடிவுக்கு வந்தது.

பாப்பான்
Papan
董事会
நாடு மலேசியா
உருவாக்கம்பாப்பான்: 1840
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)

Papan என்பது ஒரு மலாய்ச் சொல். ‘பாப்பான்’ என்றால் பலகை என்று பொருள். சீன மொழியில் ‘கா பான்’ என்று அழைக்கிறார்கள். ஈயம் எடுப்பதற்கு முன்னர் இங்கு காட்டு மரங்கள் வெட்டப்பட்டு, அவை பலகைகளாகச் செய்யப்பட்டன.

வரலாறு

1875ஆம் ஆண்டில் நடைபெற்ற பேராக் போரில் பாப்பான் நகரமும் பாதிக்கப்பட்டது. பாசிர் சாலாக் எனும் இடத்தில் ஜேம்ஸ் பெர்ச் எனும் பிரிட்டிஷ் ஆளுநர் மலாய் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பேராக் போர் தொடங்கியது.

1941-இல் ஜப்பானியர்களால் ஈப்போ நகரம் குண்டு வீசி தாக்கப்பட்டதும் அங்குள்ள மக்கள் பாப்பான் நகரில் தஞ்சம் அடைந்தனர். ஜப்பானியர் காலத்தில் பாப்பான் ரகசியக் கும்பல்களின் உறைவிடமாக விளங்கியது.

அக்கால கட்டத்தில் சிபில் கார்த்திகேசு எனும் மலேசியத் தமிழ்ப்பெண்மணி ஜப்பானியருக்கு எதிராக மலேசியாவின் நட்புப் படைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். அப்படையினருக்கு ரகசியமாக மருத்துவ உதவிகள் செய்தார்.

சிபில் கார்த்திகேசு அருங்காட்சியகம்

ஜப்பானியர்களால் சித்ரவதை செய்யப்பட்டார். இங்கிலாந்தில் காலமானார். மலேசியாவில் உள்ள சீனர் சமுகம் இவரை ஒரு தியாகி என்று போற்றுகின்றது. சிபில் கார்த்திகேசு வாழ்ந்து மறைந்த பாப்பான் நகரத்து இல்லம் இப்போது ஓர் அருங்காட்சியகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அவர் பயன்படுத்திய துணிமணிகள், பீங்கான் தட்டுகள், குவளைகள், படுக்கை விரிப்புகள், குடும்பப் படங்கள், அலுமினியப் பொருட்கள், மருந்துப் பெட்டிகள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜப்பானியர் காலத்தில் ஈப்போ-துரோனோ தொடர்வண்டி தண்டவாளங்கள் பிரித்து எடுக்கப்பட்டன. அவை சயாம்-பர்மிய மரண தொடர்வண்டி பாதை அமைக்க சயாமுக்கு அனுப்பப்பட்டன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.