ரொசெட்டாக் கல்

ரொசெட்டா கல் (Rosetta Stone) என்பது, கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டுகளை குறிக்கும். ஒரே பத்தியை பட எழுத்தையும் (hieroglyphic) உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், செந்நெறிக் கிரேக்க மொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக் கடற்கரைத் துறைமுகமான ரொசெட்டாவில், பிரெஞ்சுக்காரரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1822 ஆம் ஆண்டில் ஜேன்-பிராங்கோயிஸ் சம்போலியன் (Jean-François Champollion) என்பவரால் வாசித்து மொழிபெயர்க்கப்பட்டது. இக் கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது. இக் கல்வெட்டு, பலவித வரி நீக்கங்கள் பற்றியும், கோயில்களில் சிலைகள் அமைப்பது தொடர்பான விதிமுறைகளையும் கொண்ட ஒரு ஆணையாகும். இது ஐந்தாம் தொலெமியினால் வெளியிடப்பட்டது.

ரொசெட்டா கல்
ரொசெட்டா கல்
செய்பொருள்கிரனோடியொரைட்டு
அளவு114.4 செமீ × 72.3 செமீ × 27.93 செமீ
(45 அங்குலம் × 28.5 அங்குலம் × 11 அங்குலம்)
எழுத்துபட எழுத்தையும் உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகள், செந்நெறிக் கிரேக்க மொழி
உருவாக்கம்கிமு 196
கண்டுபிடிப்பு1799
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம்
கிரேக்க-அரமேய மொழிகளில் அசோகரின், பாக்ராம் கல்வெட்டு, காபூல் அருங்காட்சியகம்

இந்தக்கல் இதன் அதி உயர்ந்த இடத்தில் 114.4 சதமமீட்டர் அளவும், 72.3 சதமமீட்டர் அகலமும், 27.9 சதமமீட்டர் தடிப்பும் (45.04 அங் x 28.5 அங் x 10.9 அங்) கொண்டது. அண்ணளவாக 760 கிகி (1676 இறாத்தல்) நிறை கொண்ட இது கிரனோடியொரைட்டு (granodiorite) என்னும் கல்வகையைச் சேர்ந்தது ஆகும். இது 1802 ஆம் ஆண்டிலிருந்து இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அசோகரின் பாக்ராம் கல்வெட்டு

ஆப்கானிஸ்தான் நாட்டின் பர்வான் மாகாணத்தில் [1]உள்ள பாக்ராம் [2] நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட அசோகர் கல்வெட்டுக்கள் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. Parwan Province
  2. Bagram
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.