இராமகீர்த்தி
இராமகீர்த்தி அல்லது தாய்லாந்து இராமாயணம் (இராமாக்கியென், Ramakien, รามเกียรติ์) என்பது தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். இது வால்மீகி இராமாயணத்தை மூலமாகக் கொண்டது.[1] இதன் தொலைந்து போன மூலப்பகுதிகள் 1767ஆம் ஆண்டு நடந்த ஆயுத்தியாவின் அழிவில் சிதைந்து போன பின்னர், 1797ஆம் ஆண்டு தாய்லாந்து மன்னனான முதலாம் இராமாவின் இதனை எழுதினார். இக்காப்பியத்தின் மூலம் தாய்லாந்தில் கொன் என வழங்கப்படும் முகமூடி நாடகத்திற்காக இயற்றப்பட்டது எனவும் கூறுவர்[2]. இரண்டாம் இராமாவின் ஆட்சியில், அந்நாட்டவர்களின் கலை, இலக்கியம் என அனைத்திலும் வேரூன்றியது.
இக்காப்பியத்தின் மூலம் வால்மீகி ராமாயணமாக இருந்த போதிலும் இதன் நடைத்தன்மை, போர் வர்ணனை, ஆடைகள், இதில் கூறப்படும் நில அமைப்புகள், இயற்கை காட்சிகள் மற்றும் நிகழ்வுகள் ஆகியவை தாய்லாந்து பண்பாட்டுக்கு ஏற்ப மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
பாத்திர அமைப்பு
இதன் பாத்திர அமைப்புகள் வால்மீகி ராமாயணத்துடன் ஒத்து வந்த போதிலும் இதன் பாத்திர பெயர்கள் தாய் மொழிக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுளது.
கடவுள்கள்
- தாய் மொழிப்பெயர் - தமிழ்ப்பெயர்
மானிடர் பாத்திரம்
ராமனின் நண்பர்கள்
ராமனின் எதிரிகள்
- தோட்சகன் - இராவணன்
- இந்தரசித் - இந்திரஜித்
- கும்பகன் - கும்பகர்ணன்
- மையரப் - பாதாள லோக அரசன்
- தோட், கொர்ன், ட்ரிசியன் - இராவணனின் மகன்கள்
மேற்கோள்கள்
- http://www.thailandsworld.com/index.cfm?p=453
- பூலோகசிங்கம், பொ., இந்துக் கலைக்களஞ்சியம், பக். 200, கொழும்பு, 1990