ரங்கன் 99

ஜொனி 99 அல்லது ரங்கன் 99 விடுதலைப் புலிகளின் மனிதர்களுக்கு எதிரான மிதிவெடியாகும். இது பாக்கிஸ்தானிய பீ4எம்கே1 மிதிவெடியைப் பிரதிபண்ணுவதன் மூலம் உருவாக்கப்பட்டதாகக் சிலராற் கருதப்பட்டாலும் இது அதைவிட அளவிற் பெரியதுடன் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது 100 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும். 9 செண்டிமீட்டர் விட்டமும் 5.5 சென்டிமீட்டர் உயரமும் உடையது. பெரும்பாலும் பிளாஸ்டிக் கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கியே இதன் வெளிப்பாகம் தயாரிக்கப்ட்டதால் இதற்குக் குறிப்பிட நிறம் ஏதும் இல்லை. பொதுவாக பிளாஸ்டிக் கதிரைகள் எந்த நிறத்தில் இருக்கிறதோ அந்த நிறத்திலே இது காட்சியளிக்கும். குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரமாக இருக்கலாம். இதன் இன்னொரு வகையான மின்சார மிதிவெடிகள் இறுதிப்போரின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டாலும் வைப்பவர்களுக்கே காயத்தை உண்டுபண்ணியமையால் பின்னர் கைவிடப்பட்டது. இதைக் கையாள முயன்றால் வெடிக்கும், எனவே ஜொனி மின்சார மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே வைத்து அழிக்கப்படும்.

பாதுகாப்பிற்காக பியூஸ் கழற்றப்பட்ட டெனிஷ் மிதிவெடி அகற்றுபவர்களால் எடுக்கப்பட்ட ஜொனி 99 மிதிவெடி
வவுனியா மருதமடுப் கிராம அலுவலர் பிரிவிற் கண்டு அழிக்கப்பட்ட ஜொனி மின்சார மிதிவெடி
மடத்துவிளாங்குளம், பாலமோட்டை கிராம அலுவலர் பிரிவு, வவுனியாவிற் கண்டெடுக்கப்பட்ட ஜொனி 99 மிதிவெடியின் வெடித்தலை ஆரம்பித்து வைக்கும் பியுஸ்

இது அம்மான் அம்மான் 2000 ஆகிய வாகனங்களுக்கு எதிரான மிதிவெடியில் வெடித்தலை ஆரம்பித்துவைப்பதற்கும் பயன்படுகிறது.

இவற்றையும் பார்க்க

ஜொனி 95

உசாத்துணை

மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி
ஈடீஎம் | எம் 969 | பி4எம்கே1 | ரங்கன் 99 |ரைப் 69 | ரைப் 72 | விஎஸ் 50 | ஜொனி 95
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.