ஹலோ ரஸ்ட்
ஹலோ ரஸ்ட் (HALO Trust) பிரித்தானியத் தொண்டு அமைப்பாகும். இது அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட இலாப நோக்கல்லாத போரினால் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்கென உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். ஹலோ (HALO) என்னும் சொல் ஆங்கிலத்தில் Hazardous Area Life-Support Organisation என்பதில் இருந்து வந்ததாகும்.

ஹலோ ரஸ்ட் அமைப்பானது 9 நாடுகளில் 7, 000 இற்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்கின்றனர். ஹலோ ரஸ்ட் அமைப்பின் மிகப்பெரும் பணியானது ஆப்கானிஸ்தானில் இடம்பெறுகின்றது.
இந்த அமைப்பானது மறைந்த கொலின் காம்பெல் மிச்சினால் ஆரம்பிக்கப்பட்டதாகும். இவர் முன்னைநாள் பிரித்தானியப் படை கேணல் தர அதிகாரியும் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
இவ்வமைப்பு பெற்ற விருதுகளில் 2012 ஆம் ஆண்டுக்கான அறநிலைய விருதான "ஒட்டுமொத்த வாகையாளர்" விருது குறிப்பிடத்தக்கது.[1]
வெளி இணைப்புக்கள்
- ஹலோ ட்ரஸ்ட் அதிகாரப்பூர்வத்தளம். அணுகப்பட்டது 21 ஜூலை 2007 (ஆங்கில மொழியில்)