யவ் சிம் மொங் மாவட்டம்
யவ் சிம் மொங் மாவட்டம் (Yau Tsim Mong District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பு பகுதியில், மேற்கு கவுலூன் பெருநகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இது மூன்றாவது மக்கள் அடர்த்தி மிக்க மாவட்டமாகும். 2006 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணிப்பீட்டுன் படி 280, 548 ஆகும்.
யவ் சிம் மொங் மாவட்டம் Yau Tsim Mong District | |
---|---|
![]() வரைப்படத்தில் மாவட்டம் | |
அரசு | |
• மாவட்ட பணிப்பாளர் | (Mr. CHUNG Kong-mo) |
பரப்பளவு | |
• மொத்தம் | 6.55 |
• நிலம் | 12 |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 280 |
நேர வலயம் | Hong Kong Time (ஒசநே+8) |
இணையதளம் | யவ் சிம் மொங் மாவட்டம் |


வரலாறு
இந்த யவ் சிம் மொங் மாவட்டம் என அழைக்கப்படும் மாவட்டம், முன்னாள் யவ் சிம் மாவட்டம் மற்றும் மொங் கொக் மாவட்டம் எனும் இரண்டு மாவட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டமாகும். இந்த புதிய மாவட்டம் 1994 ஆம் ஆண்டு உதயமானது. இப்புதிய மாவட்டத்தின் பெயர் யவ் மா டேய், சிம் சா சுயி மற்றும் மொங் கொக் எனும் மூன்று பிரதான நகரங்களை உள்ளடக்கியதன் விளைவாக, அந்நகரங்களின் பெயர்களின் முதல் பகுதிகளை ஒருங்கிணைத்து சூட்டப்பட்ட புதிய பெயரே யவ் + சிம் + மொங் = யவ் சிம் மொங் மாவட்டம் என்றானது.
பிரதான நகரங்கள்
இம்மாவட்ட நிர்வாகத்தின் கீழுள்ள பிரதான நகரங்கள்:
- டய் கொக் சுயி
- இளவரசன் எட்வர்ட்
- ஒலிப்பிக் எம்டிஆர் நிலையம்
- மொங் கொக்
- மொங் கொக் (மேற்கு)
- யவ் மா டேய்
- கவுலூன் எம்டிஆர் நிலையம்
- யோர்டான்
- குவுன் சுங்
- அரசர் பூங்கா
- சிம் சா சுயி
- சிம் சா சுயி (கிழக்கு)
போக்குவரத்து
இந்த மாவட்டத்தில் ஐந்து பிரதான தொடருந்து வழிக்கோடுகள் உள்ளன. அவைகளாவன: சுன் வான் வழிக்கோடு, குவுன் டொங் வழிக்கோடு, டுன் சுங் வழிக்கோடு, கிழக்கு தொடருந்து வழிக்கோடு மற்றும் விமான நிலைய அதிவிரைவு வழிக்கோடு போன்றவைகளாகும்.
இம்மாவட்டத்தின் ஊடாக நூற்றுக்கும் மேற்பட்ட தொடருந்து மற்றும் சிற்றுந்து போக்குவரத்து பணிகளும் நடைபெறுகின்றன. அத்துடன் பல பேருந்தகங்கள் மற்றும் சிற்றூந்தகங்கள் போன்றனவும் உள்ளன.
பிற தகவல்கள்
தமிழர்கள் அடிக்கடி வந்துப் போகும் சுங்கிங் கட்டடம் இம்மாவட்டத்தில்தான் உள்ளது. அத்துடன் "மேற்கு துறைமுகக் குறுக்கு சுரங்கம்" எனும் கடலுக்கு அடியிலான சுரங்கப் பாதை ஒன்றும் இம்மாவட்டத்தில் உள்ளது.
ஹொங்கொங்கில் பிரசித்திப்பெற்ற பல்கலைகழகங்களில் ஒன்றான ஹொங்கொங் பல்தொழில் நுட்ப பல்கலைக்கழகம் இம்மாவட்டத்தில் இருப்பது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வெளியிணைப்புகள்
![]() |
ஒங்கொங்:விக்கிவாசல் |