டய் போ மாவட்டம்

டய் போ மாவட்டம் (Tai Po District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றும் ஆகும். இந்த மாவட்டம் ஆரம்பத்தில் சிறிய கிராமங்களைக் கொண்ட பிரதேசமாகவே இருந்தது. கிராமத்துக்கே ஏற்ற வகையில் சிறிய கடைகளையும் கொண்டிருந்தது. ஹொங்கொங்கின் மீள்கட்டுமாணப் பணிகளின் ஊடாக தற்போது அதிக வளர்ச்சியுடன் பல நகரங்களை உள்ளடக்கி வளர்ந்துள்ளது. இருப்பினும் இம்மாவட்டத்தின் பெரும்பகுதி மக்கள் வாழா தேசிய வனங்களாகவே உள்ளது. இந்த தேசிய வனங்கள பல இயற்கை வளங்களைக் கொண்டு அழகிய காட்சிகளை கொண்டுள்ளது. இயற்கையை விரும்பும் மக்களின் விருப்புக்குரிய ஒரு பகுதியாகவும் இந்த மாவட்டம் விளங்குகின்றது. முன்னாள் சிறிய கிராமங்களை மட்டுமே கொண்டிருந்த இம்மாவட்டம் தற்போது புனர்நிர்மாணப் பணிகளின் பின் மக்கள் தொகை 300,000 மேல் உயர்ந்துள்ளது. இந்த மாவட்ட சபையின் கணிப்பின் படி 133 கிராமங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன. [1]

டய் போ மாவட்டம்
Tai Po District

வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
  மாவட்ட பணிப்பாளர்(Hon. CHEUNG Hok-ming, GBS, JP)
பரப்பளவு
  மொத்தம்69.46
  நிலம்12
மக்கள்தொகை (2006)
  மொத்தம்293
நேர வலயம்Hong Kong Time (ஒசநே+8)
இணையதளம்டய் போ மாவட்டம்
டய் போ பூங்காவில் உள்ள நினைவுச் சின்னம்

ஒப்பீட்டளவில் ஹொங்கொங்கில் மூன்றாவது ஆகக்குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் இதுவாகும்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.