இயமம்
இயமம் மற்றும் அதையொத்த இன்னொரு வகைப்பாடான நியமம் ஆகியன, அறம்சார்ந்த வாழ்க்கைக்காக சைவநெறியும் யோகநெறியும் முன்வைக்கும் முக்கியமான கடமைகள் ஆகும். இயமமும் நியமமும் திருமூலர் குறிப்பிடும் எட்டு வகை யோகங்களில் இரண்டு ஆகும்.
கருத்துருக்கள் |
---|
சடங்குகள் |
சாண்டிலிய மற்றும் வராக உபநிடதங்களும், திருமூலரின் திருமந்திரத்திலும் பத்து இயமங்களும், பதஞ்சலி முனிவரின் "யோகசூத்திரம்" நூல், ஐந்து இயமங்களையும் முன்வைக்கின்றன.[1][2]
ஐந்து இயமங்கள்
பதஞ்சலி முனிவர், தன் யோகசூத்திரம் 2.30இல் குறிப்பிடும் இயமங்கள்[3]
- கொல்லாமை (अहिंसा): அகிம்சை, பிறவுயிர்களைத் துன்புறுத்தாமை.[4]
- வாய்மை (सत्य): சத்யம், உண்மையைக் கடைப்பிடித்தல்[4][5]
- கள்ளாமை (अस्तेय): அஸ்தேய களவு செய்யாமை[4]
- காமம் கடத்தல் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம், துணைக்கு துரோகம் இழைக்காமை[5]
- அவாவறுத்தல் (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்[4] தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை[5]
பத்து இயமங்கள்
சாண்டிலிய உபநிடதம்[6] மற்றும் சுவாத்மாராமம் எனும் நூல்[7][8][9] ஆகியன வருவனவாற்றைப் பத்து இயமங்கள் என்கின்றன:
- கொல்லாமை (अहिंसा): அகிம்சை
- வாய்மை (सत्य): சத்யம்
- கள்ளாமை (अस्तेय): அஸ்தேயம்
- புலனடக்கம் (ब्रह्मचर्य): பிரம்மச்சர்யம்
- பொறையுடைமை (क्षमा): க்ஷமை - மன்னிக்கும் தன்மை[10]
- வெஃகாமை (अपरिग्रहः): பேராசையை அடக்குதல்[4] தனக்கு மட்டும் சொந்தம் கொண்டாடாமை[5]
- வஞ்சனையின்மை (धृति): த்ருதி - திடமான மனது
- இரக்கம் (दया): கருணை[10]
- நேர்மை (आर्जव): (ஆர்ஜவம்) - பாசாங்கு இல்லாமை[11]
- அளவுணவு (मितहार): மிதாகாரம் - போதுமான உணவு
- தூய்மை (शौच): சௌச்சம், புனிதம் பேணல்.
இயமங்களின் வேறுபட்ட எண்ணிக்கை
அறுபதுக்கும் மேலான இந்து மெய்ஞ்ஞானப் பழநூல்கள், இயமம் பற்றி விவாதிக்கின்றன.[12] எனினும் பொதுவாக, இயமங்கள் பத்து என்றே வரையறுக்கப்பட்டிருக்கின்றன.[12]
மேலும் பார்க்க
அடிக்குறிப்புகள்
- Ramaswami, Sŕivatsa (2001). Yoga for the three stages of life. Inner Traditions / Bear & Company. பக். 229. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780892818204. http://books.google.co.in/books?id=sUzBl2k7Z98C.
- Devanand, G. K.. Teaching of Yoga. APH Publishing. பக். 45. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788131301722. http://books.google.co.in/books?id=L3mBLHWxgPsC. "கடயோகப் பிரதீபிகை முதலான நூல்கள் பத்து இயமங்களைக் குறிப்பிடும்போதும், பதஞ்சலி முனிவர் ஐந்தைந்து இயம-நியமங்களைக் குறிப்பிடுகின்றார்."
- Āgāśe, K. S. (1904). Pātañjalayogasūtrāṇi. Puṇe: Ānandāśrama. பக். 102. https://archive.org/stream/patanjaliyoga/yoga_sutras_three_commentaries#page/n111/mode/2up.
- James Lochtefeld, "Yama (2)", The Illustrated Encyclopedia of Hinduism, Vol. 2: N–Z, Rosen Publishing. ISBN 9780823931798, page 777
- Arti Dhand (2002), The dharma of ethics, the ethics of dharma: Quizzing the ideals of Hinduism, Journal of Religious Ethics, 30(3), pages 347-372
- KN Aiyar (1914), Thirty Minor Upanishads, Kessinger Publishing, ISBN 978-1164026419, Chapter 22, pages 173-176
- Svātmārāma; Pancham Sinh (1997). The Hatha Yoga Pradipika (5 ). Forgotten Books. பக். 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781605066370. http://books.google.co.in/books?id=9sBFttVx6ukC. "அத யம-ந்யம: அஹின்ஸா சத்யாமாஸ்தேயம் ப்ரஹ்யசார்யமா க்ஷமா த்ரிதி: தயார்ஜவம் மிதாஹார: சௌச்சமா சைவ யம தச 17"
- Lorenzen, David (1972). The Kāpālikas and Kālāmukhas. University of California Press. பக். 186–190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0520018426.
- Subramuniya (2003). Merging with Śiva: Hinduism's contemporary metaphysics. Himalayan Academy Publications. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780945497998. http://books.google.co.in/books?id=JupkNVxfwHgC. பார்த்த நாள்: 6 April 2009.
- Stuart Sovatsky (1998), Words from the Soul: Time East/West Spirituality and Psychotherapeutic Narrative, State University of New York, ISBN 978-0791439494, page 21
- J Sinha, கூகுள் புத்தகங்களில் Indian Psychology, Volume 2, Motilal Banarsidas, வார்ப்புரு:Oclc, page 142
- SV Bharti (2001), Yoga Sutras of Patanjali: With the Exposition of Vyasa, Motilal Banarsidas, ISBN 978-8120818255, Appendix I, pages 672-680
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.