மேலப்பெருமழை

மேலப்பெருமழை தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைபூண்டி வட்டத்தில் உள்ள ஒரு கிராமம்[4]. இங்கு சுமார் 1000 பேர் வசிக்கின்றனர். இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளைத் தந்த ஊர். பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் இக்கிராமத்தில் பிறந்தவர்.

மேலப்பெருமழை
  கிராமம்  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் டி. ஆனந்த், இ. ஆ. ப. [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
மேலப்பெருமழை எல்லை கல்
மேலப்பெருமழை பேருந்து நிலையம்
பெருமழைபுலவர் பொ. வே. சோமசுந்தரனார்

அடிப்படை வசதிகள்

  • தொடக்க பள்ளி
  • நூலகம்
  • ஆறு கோவில்கள்
  • அரசு மருத்துவமனை
  • சமுதாயகூடம்
  • திருமண மண்டபம்
  • நெல் சேமிப்பு கிடங்கு
  • கிராம நிர்வாக அலுவலகம்
  • அஞ்சல் அலுவலகம்

கோவில்கள்

  • வேம்புடை ஐயனார் உடனுறை திருவற்குழலி மாரியம்மன் திருக்கோவில்:
இந்த கோவிலின் சிறப்பு என்னவென்றால் அய்யனார் கோவில் எந்த ஊரிலும் ஊரின் மையப்பகுதியில் இருப்பதில்லை, எல்லையில் தான் இருக்கும். இவ்வூரில் மட்டும்தான் ஊரின் மையப்பகுதியில் இருக்கிறது. அதுவும் அய்யனார் மற்றும் மாரியம்மன் ஒரே கோவிலில் இருப்பது மிகவும் சிறப்பாகும். அதுமட்டுமல்லாது பொதுவாகக் கோவில்கள் எப்பொழுதும் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும், ஆனால் இக்கோவில் மேற்கு நோக்கி உள்ளது.
  • விநாயகர் திருக்கோவில்
  • பாஞ்சாலி அம்மன் திருக்கோவில்
  • அங்காளம்மன் திருக்கோவில்
  • படாமணி அம்மன் திருக்கோவில்
  • கருப்பண்ணசுவாமி திருக்கோவில்

தொழில்

  • விவசாயம்
  • மீன் வளர்ப்பு

தெருக்கள்

  • கீழத்தெரு
  • நடுத்தெரு
  • மேலத்தெரு
  • வடக்குதெரு
  • தெற்குத்தெரு

ஊராட்சி மன்ற தலைவர்

பெயர்பதவி காலம்
இரா. வேதவள்ளி
சோ. இராஜமாணிக்கம்


மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=20&centcode=0007&tlkname=Thiruthuraipoondi#MAP

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.