பொ. வே. சோமசுந்தரனார்

பொ. வே. சோமசுந்தரனார் (1909 செப்டம்பர் 51972 சனவரி 3) தற்கால உரையாசிரியர்; நாடகாசிரியர். வாழ்க்கை வரலாற்று ஆசிரியர். மேலப்பெருமழை என்னும் ஊரில் பிறந்ததால் பெருமழைப் புலவர் என அழைக்கப்பட்டார்.

பிறப்பு

பொ. வே. சோமசுந்தரனார் 1909 செப்டம்பர் 5 ஆம் நாள் திருவாரூர் மாவட்டம் மேலப்பெருமழை என்னும் சிற்றூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்.[1]

கல்வி

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையில் விபுலானந்த அடிகள், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், சோமசுந்தர பாரதியார் ஆகியோரிடம் தமிழ் பயின்றார். அதனால் ஆழ்ந்த தமிழ்ப்புலமை பெற்றார்.[2]

தொழில்

பொ. வே. சோமசுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றிருப்பினும் தான் பிறந்த சிற்றூரிலேயே வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டார்.

குடும்பம்

சோமசுந்தரனாரின் மகன்கள் பசுபதி மற்றும் மாரிமுத்து ஆவர். இவர்கள் இருவரும் தத்தம் குடும்பத்தினருடன் மேலப்பெருமழை கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

எழுத்துப்பணி

பொ. வே. மோ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கு உரை, நாடகம், வாழ்க்கை வரலாறு என 24 நூல்களைப் படைத்துள்ளார். அவை வருமாறு:[3],[1]

வ.எண்ஆண்டுநூல்வகை
01நற்றிணைஉரை
02குறுந்தொகைஉரை
03அகநானூறுஉரை
04ஐங்குறுநூறுஉரை
05கலித்தொகைஉரை
06பரிபாடல்உரை
07பத்துப்பாட்டுஉரை
08ஐந்திணை எழுபதுஉரை
09ஐந்திணை ஐம்பதுஉரை
10சிலப்பதிகாரம்உரை
11மணிமேகலைஉரை
12சீவக சிந்தாமணிஉரை
13வளையாபதிஉரை
14குண்டலகேசிஉரை
15உதயணகுமார காவியம்உரை
16நீலகேசிஉரை
17பெருங்கதைஉரை
18புறப்பொருள் வெண்பா மாலைஉரை
19கல்லாடம்உரை
20திருக்கோவையார்உரை
21பட்டினத்தார் பாடல்கள்உரை
22செங்கோல்நாடகம்
23மானநீகைநாடகம்
24பண்டிதமணிவாழ்க்கை வரலாறு

மறைவு

சோமசுந்தரனார் 1972 சனவரி 3 ஆம் நாள் காலமானார்.[1]

சான்றடைவு

  1. http://muelangovan.blogspot.in/2011/09/blog-post.html
  2. http://www.chemmozhi.net/2013/01/blog-post_2536.html
  3. வைத்தியநாதன் கே., தினமணி செம்மொழிக்கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், பக்.295

வெளியிணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.