மெரினா (2012 திரைப்படம்)
மெரினா, 2012 இல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். பாண்டி ராஜ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும் அவருடன் இணைந்து ஓவியாவும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 2012 /பிப்ரவரி/ 3ம் திகதி வெளியானது. இத்திரைப்படம் பல கலப்பு விமர்சனங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.[2][3][4][5][6]
மெரினா | |
---|---|
![]() | |
இயக்கம் | பாண்டிராஜ் |
தயாரிப்பு | பாண்டிராஜ் |
கதை | பாண்டிராஜ் |
இசை | ஜீ.கிறிஷ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | விஜய் |
படத்தொகுப்பு | ஆதிப்பன் சிவா |
கலையகம் | பசங்க புரொடக்சன்சு |
வெளியீடு | 3 பெப்ரவரி 2012[1] |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தனது கொடுமைக்கார மாமாவிடம் இருந்து தப்பி வரும் அம்பிகாபதி (பக்கோடா பாண்டியன்) இறுதியில் சென்னை மெரினா கடற்கரையை வந்தடைகிறான். அங்கு தனது வயிற்றுப் பிழைப்புக்காக தண்ணீர் பைகள் விற்கும் தொழிலை மேற்கொள்கிறான். பின்னர் சுண்டல் விற்கும் தொழிலையும் மேற்கொள்கிறான். இவ்வாறு வாழும் அம்பிகாபதிக்கு மெரினா கடற்கரை பல நட்பு வட்டாரங்களையும் அளிக்கிறது. அம்பிகாபதியின் கனவு படிக்க வேண்டும் என்பதாகும். தனது ஓய்வு நேரங்களில் படிக்கவும் செய்தான். அவனது ஆசை மெரினா கடற்கரையில் உள்ள தனது நண்பர்களுடன் பாடசாலையில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதாகும்.
மெரினா கடற்கரை பல காதல் ஜோடிகளுக்கும் அடைக்கலம் கொடுத்தது. அவ்வாறான ஒரு காதல் ஜோடியே செந்தில் நாதன் (சிவகார்த்திகேயன்) மற்றும் சொப்பன சுந்தரி (ஓவியா) ஆகியோர்.
நடிகர்கள்
- சிவ கார்த்திகேயன் - செந்தில்நாதன்
- ஓவியா - சொப்னசுந்தரி
- 'பக்கோடா' பாண்டியன் - அம்பிகாபதி
- ஜெயபிரகாஷ் - கௌரவ தோற்றம்
- சாந்திகுமாரி
- சதிஸ்
- ‘ஜித்தன்' மோகன்
- சுந்தராஜன்
- சதீஸ்
- கௌதம் புருசோத்-கைலாசம்
- செந்திகுமாரி
- சதிஷ் - இச்சிறுவன் 2012/செப்டம்பர்/8ம் திகதி நடந்த விபத்தொன்றில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
- சிறப்பு தோற்றம் (ஊக்குவிக்கும் பாடல்)
வெளியீடு
இத்திரைப்படத்தின் செயற்கை கோள் வெளியீட்டு உரிமையை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி பெற்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இத்திரைப்படத்திற்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியிருந்தது.
மேற்கோள்கள்
- "'Marina' releases on February 3". IndiaGlitz. பார்த்த நாள் 27 January 2012.
- "Marina is Boring". sify.com. மூல முகவரியிலிருந்து 31 January 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-02-04.
- "Marina Movie Review". kollyinsider.com. பார்த்த நாள் 2012-02-03.
- "Marina Review - Tamil Movie Review by Rohit Ramachandran". Nowrunning.com (2012-02-04). பார்த்த நாள் 2012-08-05.
- "Pandiraj's next is 'Marina' - Breaking News - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-10-21.
- "Siva Karthikeyan & Oviya team with Pandiraj - Tamil Movie News". IndiaGlitz. பார்த்த நாள் 2011-10-21.