இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலிய, நியூசிலாந்து சுற்றுப்பயணம் 1876–77

இங்கிலாந்து துடுப்பாட்ட அணி 1876-77 இல் ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் துடுப்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டது. இதன் போது வரலாற்றில் முதலாவது தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடப்பட்டது. ஆங்கிலேய அணி சில வேளைகளில் ஜேம்ஸ் லிலீவைட்டின் XI அணி என அழைக்கப்பட்டது. மொத்தமாக 23 ஆட்டங்கள் விளையாடிய போதும், இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் உட்பட மூன்று போட்டிகளே முதல்-தர ஆட்டங்களாகக் கணிக்கப்பட்டன. முதலாவது போட்டி அடிலெய்டு நீள்வட்ட அரங்கில் 1876 நவம்பர் 16 இலும், கடைசிப் போட்டி அதே அரங்கில் 1877 ஏப்ரல் 14 இலும் நடைபெற்றன. 15 ஆட்டங்கள் ஆத்திரேலியாவிலும், எட்டு நியூசிலாந்திலும் விளையாடப்பட்டன. பில்லி முர்டாக் குச்சக்காப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆத்திரேலியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான பிரெட் ஸ்பொட்ஃபோர்த் முதலாவது போட்டியில் சேர்க்கப்படவில்லை. 1877 மார்ச் 15 முதல் இரண்டு அணிகளும் இரண்டு ஆட்டங்களில் விளையாடின. இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாக முடிந்தது.

1877 ஆத்திரேலியா எ. இங்கிலாந்து துடுப்பாட்டத் தொடர்
நாள் 15 மார்ச் 1877 – 4 ஏப்ரல் 1877
இடம் ஆத்திரேலியா
முடிவு 2-தேர்வுத் தொடர் 1-1 ஆக சமனாக முடிந்தது.
அணிகள்
 ஆத்திரேலியா  இங்கிலாந்து
தலைவர்கள்
டேவ் கிரெகரி ஜேம்ஸ் லிலீவைட்
அதிக ஓட்டங்கள்
சார்லசு பான்னர்மான் (209)
நாட் தொம்சன் (67)
ஜார்ஜ் உலைட் (139)
அலன் ஹில் (101)
அதிக வீழ்த்தல்கள்
டொம் கென்டல் (14)
பில்லி மிட்வின்டர் (8)
ஜேம்ஸ் லிலீவைட் (8)
அல்பிரட் ஷா (8)
முதல் துடுப்பாட்டப் போட்டியின் முதலிரண்டு நாட்கள் குறித்த பத்திரிகைக் கண்னோட்டம், 1877

கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் போட்டி 1877 மார்ச் 15 ஆம் திகதி தொடங்கியது. ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கிடையில் மெல்பேண் நகரில் தொடங்கிய இப்போட்டியில் நாணயச் சுண்டில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. சார்லசு பான்னர்மன் ஆட்டமிழக்காமல் பெற்ற 165 ஓட்டங்களின் உதவியுடன் ஆஸ்திரேலியா 245 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்து ஆடிய இங்கிலாந்து அணி 196 ஆட்டங்களைப் பெற்றது. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பகுதி ஆட்டத்தில் (இனிங்ஸில்) பான்னர்மன் நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க அணி 104 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 154 என்ற வெற்றி இலக்குடன் தமது இரண்டாவது பகுதி ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்து அணி 108 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. உலகின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 45 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

அணிகள்

 ஆத்திரேலியா  இங்கிலாந்து
  • டேவ் கிரெகரி ()
  • ஜாக் பிளாக்கம் (குகா)
  • சார்லசு பானர்மான்
  • பிரான்சுபி கூப்பர்
  • டொம் கரெட்
  • நெட் கிரெகரி
  • யோன் ஒட்ஜெசு
  • டொம் ஹோரன்
  • டொம் கெண்டல்
  • பில்லி மிட்வின்டர்
  • நாட் தாம்சன்
  • தோமசு கெலி
  • பில்லி முர்டாக்
  • பிரெட் ஸ்பொட்ஃபோர்த்

ஆட்டங்கள்

1-வது தேர்வு

15–19 மார்ச் 1877
ஓட்டப்பலகை
245 (169.3 ஓவர்கள்)
சார்லசு பான்னர்மேன் 165(r/h)
அல்பிரட் ஷா 3/51 (55.3 ஓவர்கள்)
196 (136.1 ஓவர்கள்)
என்றி யப் 63 (241)
பில்லி மிட்வின்டர் 5/78 (54 ஓவர்கள்)
104 (68 ஓவர்கள்)
டொம் ஒரான் 20 (32)
அல்பிரட் ஷா 5/38 (34 ஓவர்கள்)
108 (66.1 ஓவர்கள்)
ஜோன் செல்பீ 38 (81)
டொம் கெண்டல் 7/55 (33.1 ஓவர்கள்)
ஆத்திரேலியா 45 ஓட்டங்களால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: கேர்ட்டிசு ரீட் (ஆசி), பென் டெரி (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

2-வது தேர்வு

31 மார்ச் – 4 ஏப்ரல் 1877
ஓட்டப்பலகை
122 (112.1 ஓவர்கள்)
பில்லி மிட்வின்டர் 31
அலன் ஹில் 4/27 (27 ஓவர்கள்)
261 (130.2 ஓவர்கள்)
ஜார்ஜ் உலைட் 52
டொம் கெண்டல் 4/82 (52.2 ஓவர்கள்)
259 (154.3 ஓவர்கள்)
டேவ் கிரெகரி 43
ஜேம்ஸ் சதர்ட்டன் 4/46 (28.3 ஓவர்கள்)
6/122 (52.1 ஓவர்கள்)
ஜார்ஜ் உலைட் 63
ஜோன் ஹொட்ஜசு 2/13 (6 ஓவர்கள்)
இங்கிலாந்து 4 இலக்குகளால் வெற்றி
மெல்போர்ன் துடுப்பாட்ட மைதானம், மெல்பேர்ண்
நடுவர்கள்: சாம் கொஸ்டிக் (ஆசி), பென் டெரி (இங்)
  • நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.