மீயொலி

மீயொலி (Ultrasound) (இலங்கை வழக்கு: கழியொலி) என்பது ஒலியின் அதிர்வெண் 20,000க்கு மேற்பட்ட ஒலி அலைகளைக் குறிக்கும். மீயொலிகளை மனிதர்களால் கேட்க முடியாது. மாந்தர்கள் தம் செவியால் 20 முதல் 20,000 ஒலி அலைகள் கொண்ட ஒலியலைகளைத்தான் கேட்க இயலும்.

Approximate frequency ranges corresponding to ultrasound, with rough guide of some applications

மீயொலி கேட்கும் திறன்

நாய்கள், ஓங்கில் (டால்பின்), வௌவால் போன்ற சில விலங்குகள் மீயொலியைக் கேட்கும் திறன் கொண்டவை. மேலும் குழந்தைகளும் பெரியர்வகளைக் காட்டிலும் உயர் அதிவெண்கள் கொண்ட ஒலிகளைக் கேட்க வல்லவர்கள்.வௌவால் இரவு நேரங்களில் பறந்து பயணம் செய்யும் போது அது உண்டாக்கும் மீயொலிகள் பிற பொருட்களின் மீது பட்டு எதிரொலிக்கும் அளவை உணர்ந்து கொண்டே தம் திசையை நிர்ணயிக்கின்றன.

மீயொலிகளின் பயன்கள்

An ultrasound examination in East Germany, 1990

மீயொலிகள் நீர்மப்பொருள் வழி சென்று ஒரு பொருளின் மீது ஒட்டியிருக்கும் நுண்ணிய அழுக்குகளை உலுப்பி விடுவிக்க வல்லது. இதனை வேதியியலிலும், குறைக்கடத்தி மின் கருவிகள் செய்வதிலும், வேறு பல துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். குறைக்கடத்தி மின் கருவிகளில், கருவியில் அலுமினியம் போன்ற மின் கம்பிகளை சிலிக்கான் சில்லோடு இணைக்க (ஒட்டுவிக்க) மீயொலிகளைப் பயன்படுத்துகின்றனர். மீயொலி அதிர்ச்சியால் அணுக்கள் அதிரும் பொழுது அணுக்கவையால் ஒட்டுதல் ஏற்படுகின்றது. மீயொலியானது மருத்துவச் சோதனை முறைகள் பலவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றது. கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மாரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் நிலையை அறிதலில் மிகவும் பயன்பாடுள்ளதாக அமைகின்றது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.