மாரியம்மன்
கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி (மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும்.



புகழ்பெற்ற தலங்கள்
இந்தியா
தமிழகம்
நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன்
- பண்ணாரி மாரியம்மன் கோயில்
- இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
- வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்
- திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்
- நத்தம் மாரியம்மன் திருக்கோயில்
- வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்
- புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்
- சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
- கணவாய் மாரியம்மன் திருக்கோயில்
- ஓட்டங்காடு மாரியம்மன் திருக்கோயில்
- வேதாளை-வலையர்வாடி சக்தி மாரியம்மன் கோவில்
- திருவில்லிபுத்தூர்- பெரிய மாரியம்மன் கோவில்
மற்ற நாடுகள்
- சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில் (சிங்கப்பூர்)
- பாங்காக் மாரியம்மன் கோயில் (தாய்லாந்து)
- பிரிட்டோரியா மாரியம்மன் கோயில் (தென்னாப்பிரிக்கா)
- ஹோ சி மின் நகர மாரியம்மன் கோயில் (வியட்நாம்)
- மகா மாரியம்மன் ஆலயம்,மிட்லண்ட்ஸ்,கோலாலம்பூர் (மலேசியா)
- அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், குயின் ஸ்ட்ரீட், பினாங்கு (மலேசியா)
- SRI MUTHU MAHA MARIAMMAN TEMPLE ROTAN TUNGGAL RAUB PAHANG (MALAYSIA)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.