பண்ணாரி மாரியம்மன் கோயில்


பண்ணாரி மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்புவாய்ந்த கோவிலாகும்.

பண்ணாரி மாரியம்மன் கோயில்
பெயர்
பெயர்:பண்ணாரி மாரியம்மன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:ஈரோடு
அமைவு:பண்ணாரி
கோயில் தகவல்கள்
தாயார்:பண்ணாரி அம்மன் (மாரியம்மன்)

அமைவிடம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் - மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209 இல் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது.

சிறப்பு

பண்ணாரி அம்மன் கோயில் மேல்முகப்பு

ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் தீ மிதி (பூக்குழி) திருவிழா. பண்ணாரியம்மன் கோவில் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 209 ல் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலிலிருந்து திம்பம் மலைப்பாதை ஆரம்பம். இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் தூண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தினடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவிற்கு கோவை, ஈரோடு, சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான மக்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக திருவிழா அன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புலிகள் காப்பகம் தேசிய புலிகள் ஆணைய உத்தரவுப்படி, தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக சத்தியமங்கலம் வனக்கோட்டத்தில் உள்ள 1 லட்சத்து 4 ஆயிரம் ஹெக்டேர் வனப்பரப்பு புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டு , 1.12.2013 முதல் நடைமுறைக்கு வந்தது .சத்தி வனக்கோட்டத்தின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் கர்நாடக வனப்பகுதியும், தெற்கே நீலகிரி மற்றும் கோவை வனக்கோட்டமும், கிழக்கே ஈரோடு வனக்கோட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான், செந்நாய், கரடி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. மேலும், 25க்கும் மேற்பட்ட புலிகள் உள்ளதாக கணக்கெடுப்புகள் தெரிவித்துள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.