மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில்
மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில் மாந்துறை கிராமத்தில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 58வது சிவத்தலமாகும். மாந்துறை திருச்சிராப்பள்ளி - லால்குடி பேருந்துத் தடத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். இது லால்குடியிலிருந்து மேற்காக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சி, லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் இருந்து பேருந்து மூலம் செல்ல வசதி கொண்டுள்ளது. இச்சிற்றூரின் பெரும் சிறப்பு இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான தொன்மை வாய்ந்த கோயில் கொண்ட திருத்தலமாக இது இருப்பதே.
தேவாரம் பாடல் பெற்ற மாந்துறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருமாந்துறை, வடகரை மாந்துறை |
பெயர்: | மாந்துறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மாந்துறை |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் |
தாயார்: | பாலாம்பிகை |
தல விருட்சம்: | மாமரம் |
தீர்த்தம்: | காவேரி, காயத்ரி தீர்த்தம் |
ஆகமம்: | காமிகம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், அருணகிரியார் |
திருஞான சம்பந்தர்
இவ்வடகரை மாந்துறையானை திருஞான சம்பந்தர் அருளிச் செய்த திருப்பாடற்திரட்டில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:
மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே
வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.
அருணகிரிநாதர்
முருகன் அருள் பெற்று திருப்புகழ் பலவற்றினை வாய்மலர்ந்த அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்:
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த வளநாடா
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த பெருமாளே.
இவற்றையும் பார்க்க
குறிப்புதவிகள்
1. http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=231