மறவன் (திரைப்படம்)

மறவன் 1993 ஆம் ஆண்டு பிரபு மற்றும் குஷ்பூ நடிப்பில், மனோஜ் குமார் இயக்கத்தில், தேவா இசையில், மோகன் நடராஜன் மற்றும் தரங்கை வி. சண்முகம் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3][4].

மறவன்
இயக்கம்மனோஜ் குமார்
தயாரிப்புமோகன் நடராஜன்
தரங்கை வி. சண்முகம்
கதைமனோஜ் குமார்
சிவராம் காந்தி (வசனம்)
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுசேகர்
படத்தொகுப்புமோகன் - பாஸ்கர்
கலையகம்ஸ்ரீ ராஜகாளி அம்மன் என்டர்ப்ரைசஸ்
வெளியீடுஆகத்து 15, 1993 (1993-08-15)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

சேதுபதி (பிரபு) தன் தந்தை மாணிக்கம் (விஜயகுமார்), தாய் மீனாட்சி (சுமித்ரா) மற்றும் தங்கை லட்சுமி (தாட்சியினி) ஆகியோரோடு நகரத்தில் வசிக்கிறான். நேர்மையான காவல்துறை அதிகாரியான மாணிக்கம் தன் மகனும் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று விரும்புகிறார். சேதுபதி இந்தியக் காவல் பணித் தேர்வில் தேர்ச்சிபெற்று காவல்துறை அதிகாரியாகிறான். சோலையூர் என்ற கிராமத்தில் அவன் பணியில் சேர்கிறான்.

அந்த கிராமத்திற்குச் செல்லும் சேதுபதி அங்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு அதிர்ச்சியடைகிறான். கிராமத்தின் தலைவர் ராஜதுரை (ஆர். பி. விஸ்வம்) மற்றும் அவரது மகனும் அரசியல்வாதியுமான சங்கரபாண்டியன் (நெப்போலியன்) இருவரின் கட்டுப்பாட்டில்தான் அந்த கிராமம் இருக்கிறது. அங்குள்ள மக்கள் அவர்களால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

சேதுபதி முதலில் அந்தக் காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்களை (சந்திரசேகர், தியாகு மற்றும் வடிவேலு) நல்வழிப்படுத்துகிறான். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த தங்கத்தாயும் (குஷ்பூ) சேதுபதியும் காதல்வயப்படுகின்றனர். ஒருநாள் கிராமத்தினர் முன்னிலையில் ராஜதுரையை அடித்து, கைது செய்து சிறையிலடைக்கிறான் சேதுபதி. சங்கரபாண்டி தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ராஜதுரையை ஒரு மணி நேரத்திற்குள் விடுதலை செய்யவைக்கிறான். அடுத்த நாள் காவல் நிலையத்தில் சேதுபதி இல்லாதபோது அங்கு தன் ஆட்களுடன் வரும் சங்கரபாண்டி மற்றும் ராஜதுரை அந்த காவல் நிலையத்தில் சேதுபதிக்கு ஆதரவாக பணிபுரியும் காவலர்களை அடித்துக் காயப்படுத்துகிறார்கள். அவர்கள் சென்ற பிறகு அங்குவரும் சேதுபதி இதனைக் கண்டு ஆத்திரம் கொள்கிறான். அதன் பின் நடந்தது மீதிக்கதை.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் வாலி[5].

வ. எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 சந்திரனைக் கூப்பிடுங்க எஸ். பி. பாலசுப்ரமணியன் 3:30
2 கொண்டியிலே எஸ். ஜானகி 5:36
3 சிங்கார குயிலு எஸ். பி. பாலசுப்ரமணியன், சித்ரா 4:47
4 குலாபி குலாபி எஸ். பி. பாலசுப்ரமணியன், எஸ். ஜானகி 4:35
5 என் ஊரு எஸ். ஜானகி 4:45

மேற்கோள்கள்

  1. "மறவன்".
  2. "மறவன்".
  3. "மறவன்".
  4. "மறவன்".
  5. "பாடல்கள்".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.