மரீசி

மரீசி என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மாவின் குமாரன் ஆவார். மரீசி மகரிஷியின் மனைவிக்கு கலை என்று பெயர். இவர்களுக்கு காசிபர் என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் உள்ளனர். மேலும் மரீசி சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு பெரும் ரிசிகளுள் ஒருவரும், பிரம்மாவின் படைப்பு தொழிலை செய்ய உருவாக்கப்பெற்ற பிரஜாபதிகளுள் ஒருவருமாவார்[1]

மரீசி
மரீசி
குழந்தைகள்காசிபர்

தோற்றம்

பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனத்குமாரர் முதலிய சனகாதி முனிவர்கள் ஆகியோரைத் தோற்றுவித்தார். ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடையச் சென்றதால், நாரதர், தட்சன், வசிட்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், அங்கரிசர், அத்திரி, மரீசி ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார்.

மானசரோவர் ஏரி தோற்றம்

ஒரு முறை மரீசி சிவபெருமானை 12 ஆண்டுகள் தாந்திரீக முறைப்படி வணங்க முடிவுசெய்தார். ஆனால் கையிலை முழுவதும் நீர்நிலைகள் பனியாக உறைந்து நின்றன. தாந்திரீக முறைப்படி குளித்து ஈர உடையுடனே வழிபடவேண்டும் என்ற நியதியுள்ளதால் மரீசியால் சிவபெருமானை வணங்க இயலவில்லை. எனவே தனது தந்தையான பிரம்மாவிடம் அபயம் வேண்டினார்.

பிரம்மாவும் கைலாயம் மலையிலுள்ள பனிக்கட்டிகளை உருகச் செய்து அதிலிருந்து மானசரோவர் என்ற ஏரியை உருவாக்கி தந்தார்.[2]

ஆதாரம்

  1. http://devanga.org/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BF/devanga-kothiras-history-of-mareesi-maharishi.html
  2. திருக்கைலை யாத்திரைப் பயணம் 16

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.