மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்

மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது.[1] இந்தக் கோவில் 23 ஏக்கர் (93,000 மீ 2) பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர்.

ராசகோபால சுவாமி கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவாரூர்
அமைவு:மன்னார்குடி
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தமிழர் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:12ம் நூற்றாண்டு
அமைத்தவர்:முதலாம் குலோத்துங்க சோழன்

கோயில்

உறையும் ராஜகோபால சுவாமியின் திருஉருவத்தின் உயரம் 12 அடி (3.7 மீ) ஆகும். ஆலயம் நுழைவு வாயிலில் மழை நீர் சேகரிக்கப்பட ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வளாகத்தில் 16 கோபுரங்களுடன் (கோபுரம் நுழைவாயில்), 7 தூண்கள் (பிராகாரத்தில்), 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் (அரங்குகள்) மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் (கோவில் குளங்கள்) உள்ளன. உற்சவர் சிலை சோழர் காலத்தினைச் சேர்ந்த ஓரு வெண்கலச் சிலை ஆகும். இங்குள்ள குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது; இது ஹரித்திராந்தி என அழைக்கப்படுகிறது

  • தல மூர்த்தி : ஸ்ரீ ராஜகோபாலசுவாமி
  • தல இறைவி : செங்கமலத்தாயார் (செண்பக லெட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டாப் பத்தினி)
  • தல தீர்த்தம் : ஹரித்ராநதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம்.

வரலாறு

பெயர்க்காரணம்

நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், குலோத்துங்க சோழன் இக்கோயிலை அமைத்தபடியால் குலோத்துங்க சோழ விண்ணகரம் என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோயில் கொண்டிருப்பதால் ராஜமன்னார்குடி என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோயில் கட்டியதால் மன்னார்கோயில் என்றும், இவ்வூர் அழைக்கப்படுகிறது.

கட்டமைப்பு

இந்தக் கோவில் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கிபி 1070-1125 இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோவில் சுற்றி வளரத் தொடங்கியது.

கோயில் விழாக்கள்

பங்குனிப் பெருவிழா=

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா 18 நாட்களும், அதைத் தொடர்ந்து, 12 நாள்கள் நடைபெறும் விடையாற்றி விழா கிருஷ்ண தீர்த்த தெப்ப உத்சவத்துடன் நிறைவடையும்.தங்கசூரியபிரபை அன்று அகமுடையார் சமூகத்தால் மண்டகபடி சிறப்பாக நடைபெறும்

தேரோட்டம்

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருளும் உள்பிரகார தேரோட்டம் நடைபெறும். இந்தத் தேர் கடந்த 1892-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது. 2014ஆம் ஆண்டு மொத்தம் ரூ.26.50 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி நிறைவுற்றது.[2]

படங்கள்

மேற்கோள்கள்

  1. South Indian Railway Co., Ltd 2004, p. 176
  2. http://www.dinamani.com/religion/2014/07/23/மன்னார்குடி-ராஜகோபால-சுவாம/article2345410.ece
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.