மண்டபம் முகாம்

மண்டபம் முகாம், (Mandapam Camp), தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ளது. மண்டபம் முகாமிலிருந்து 18 கிமீ தொலைவில் வட இலங்கையின் மன்னார் நகரம் உள்ளது.

வரலாறு

  • 283 ஏக்கர் பரப்பளவு கொண்ட மண்டபம் முகாம் பிரித்தானிய இந்தியா அரசால் 1900ல் நிறுவப்பட்டது. இலங்கையின் தேயிலை, காபி மற்றும் இரப்பர் தோட்டங்களில் பணிபுரிய, இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை மண்டபம் முகாமிலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். [1][2]
  • 1950ல் இலங்கை அரசு, இந்திய வம்சாவழித் தமிழர்களை, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிய போது, முதலில் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டு, பின்னர் தமிழ்நாட்டில் விருப்பப்பட்ட இடங்களில் வாழ அனுமதித்ததுடன், அவர்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்கு பல சலுகைகள் வழங்கப்பட்டது.
  • வசதியற்ற, படிப்பு குறைந்த இலங்கைத் தமிழர்கள், மன்னார் நகரத்திலிருந்து படகுகள் மூலம் மண்டபம் முகாமிற்கு அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர். பின்னர் அவர்களை தமிழ்நாட்டின் பல அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது தமிழ்நாட்டின் இலங்கை அகதிகள் 132 முகாம்களில் ஏறத்தாழ 70,000 மக்கள் உள்ளனர். ஏதேனும் தொழில் தெரிந்த இலங்கைத் தமிழ் அகதிகள் முகாம்களுக்கு வெளியே தங்கி வருவாய் ஈட்டுகின்றனர். எத்தொழிலும் செய்ய இயலாதவர்கள் மட்டும் முகாம்களில் தங்கியுள்ளனர்.[3] [4]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.