பொது மரபுவழி

ஒரு உயிரினக் குழுவானது பொது மூதாதையொன்றைக் கொண்டிருப்பின் அக்குழு பொது மரபுவழியைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும். உயிரியலில், முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு (theory of universal common descent), புவியில் உள்ள எல்லா உயிரினங்களும் ஒரு பொது மூதாதையிலிருந்தே உருவாகின என்று கூறுகிறது.

இனங்களின் தோற்றம் நூல் வெளியிடப்பட்ட காலத்தில் டார்வினின் தோற்றம்.

படிவளர்ச்சி அல்லது கூர்ப்புக் கொள்கையின் அடிப்படையிலான முழுமைப் பொது மரபுவழிக் கோட்பாடு சார்லஸ் டார்வினால் இனங்களின் தோற்றம் (The Origin of Species, 1859) மற்றும் மனிதனின் மரபுவழி (The Descent of Man, 1871) ஆகிய அவரது நூல்களில் முன்மொழியப்பட்டது. இக்கோட்பாடு இன்று உயிரியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. அத்துடன் தற்போது வாழும் எல்லா உயிரினங்களினதும் இறுதியான முழுமைப் பொது மூதாதை (last universal common ancestor), அதாவது மிகக் கிட்டிய பொது மூதாதை (most recent common ancestor) ஏறத்தாழ 3.5 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் தோன்றியதாகவும் கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.